பன்னிரண் டாங்கலை யாதி வயிரவிதன்னி லகாரமு மாயையுங் கற்பித்துப்பன்னிரண் டாதியோ டந்தம் பதினாலுஞ்சொன்னிலை சோடச மந்தமென் றோதிடே.
அந்தம் பதினா லதுவே வயிரவிமுந்து நடுவும் முடிவும் முதலாகச்சிந்தைக் கமலத் தெழுகின்ற மாசத்திஅந்தமு மாதியு மாகிநின் றாளே.
ஆகின்ற மூவரு மங்கே யடங்குவர்போகின்ற பூதம் பொருந்து புராதரர்சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்போகுந் திரிபுரை புண்ணியத் தோருக்கே.
புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்எண்ணிய நாட்க ளிருபத்தேழ் சூழ்மதிபண்ணிய வன்னி பகலோன் மதியீறுதிண்ணிய சிந்தைதன் றென்னனும் ஆமே.
தென்னன் றிருநந்தி சேவகன் தன்னொடும்பொன்னங் கிரியுள பூதலம் போற்றிடும்பன்னும் பரிபிடி யந்தம் பகவனோடுன்னுந் திரிபுரை யோதிநின் றானுக்கே.
ஓதிய நந்தி யுணரும் திருவருள்நீதியில் வேத நெறிவந் துரைசெயும்போத மிருபத் தெழுநாள் புணர்மதிசோதி வயிரவி சூலம்வந் தாளுமே.
சூலங் கபாலங்கை யேந்திய சூலிக்குநாலங் கரமுள நாகபா சாங்குசம்மாலங் கயனறி யாத வடிவுக்குமேலங்க மாய்நின்ற மெல்லிய லாளே.
மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானிசொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழைகல்லிய லொப்பது காணுந் திருமேனிபல்லிய லாடையும் பன்மணி தானே.
பன்மணி சந்திர கோடி திருமுடிசொன்மணி குண்டலக் காதி யுழைக்கண்ணிநன்மணி சூரிய சோம நயனத்தாள்பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.
பூரித்த பூவித ழெட்டினுக் குள்ளேயோர்ஆரியத் தாளுண்டங் கோரெண்மர் கன்னியர்பாரித்த பெண்க ளறுபத்து நால்வருஞ்சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே.
கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்எண்டிசை யோகி இறைவி பராசக்திஅண்டமோ டெண்டிசை தாங்கு மருட்செல்விபுண்டரி கத்தினுள்ளும் பூசனை யாளே.
பூசனை கெந்தம் புனைமலர் மாகோடியோசனை பஞ்சத் தொலிவந் துரைசெய்யும்வாச மிலாத மணிமந் திரயோகந்தேசந் திகழுந் திரிபுரை காணே.
காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறுபூணும் பலபல பொன்போலத் தோற்றிடும்பேணுஞ் சிவனும் பிரமனும் மாயனுங்காணுந் தலைவிநற் காரணி காணே.
காரணி மந்திர மோதுங் கமலத்துப்பூரண கும்ப விரேசம் பொருந்தியநாரண நந்தி நடுவங் குரைசெய்தஆரண வேதநா லந்தமும் ஆமே.
அந்த நடுவிர லாதி சிறுவிரல்வந்த வழிமுறை மாறி யுரைசெயுஞ்செந்தமி ழாதி தெளிந்து வழிபடுநந்தி யிதனை நவமுரைத் தானே.
உரைத்த நவசத்தி யொன்று முடியநிரைத்த விராசி நெறிமுறை எண்ணிப்பிரைச்சத மெட்டுமுன் பேசிய நந்திநிரைத்து நியதி நியமஞ்செய் தானே.
தாமக் குழலி தயைக்கண்ணி யுண்ணின்றவேமத் திருளற வீசு மிளங்கொடியோமப் பெருஞ்சுட ருள்ளெழு நுண்புகைமேவித்து அமுதொடு மீண்டது காணே.
காணு மிருதய மந்திர முங்கண்டுபேணு நமவென்று பேசும் தலைமேலேவேணு நடுவு மிகநின்ற வாகுதிபூணு நடுவென்ற வந்தஞ் சிகையே.
சிகைநின்ற வந்தக் கவசங்கொண் டாதிப்பகைநின்ற வங்கத்தைப் பாரென்று மாறித்தொகைநின்ற நேத்திர முத்திரை சூலம்வகைநின்ற யோனி வருத்தலு மாமே.
வருத்த மிரண்டுஞ் சிறுவிரன் மாறிப்பொருந்தி யணிவிரல் சுட்டிப் பிடித்துநெரித்தொன்ற வைத்து நெடிது நடுவேபெருத்த விரலிரண் டுள்புகப் பேசே.
பேசிய மந்திர மிகாரம் பிரித்துரைகூச மிலாத சகாரத்தை முன்கொண்டுவாசிப் பிராண னுபதேச மாகைக்குக்கூசிய விந்து வுடன்கொண்டு கூவே.
கூவிய சீவன் பிராணன் முதலாகப்பாவிய சவ்வுடன் பண்ணு மகாரத்தைமேவிய மாயை விரிசங்கு முத்திரைதேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே.
நின்ற வயிரவி நீலி நிசாசரிஒன்று மிரண்டு மொருங்கிய வுள்ளத்துச்சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கேநன்றருள் ஞாலத்து நாடிடுஞ் சாற்றியே.
சாற்றிய வேதஞ் சராசர மைம்பூதம்நாற்றிசை முக்கண்ணி நாடு மிருள்வெளிதோற்று முயிர்ப்பன்மை சோதி பராபரைஆற்றலொ டாய்நிற்கு மாதி முதல்வியே.
ஆதி வயிரவி கன்னித் துறைமன்னிஓதி யுணரி லுடலுயி ரீசனாம்பேதை யுலகிற் பிறவிகள் நாசமாம்ஓத வுலவாத கோலமொன் றாகுமே.
கோலக் குழலி குலாய புருவத்தள்நீலக் குவளை மலர்கின்ற கண்ணினாள்ஆலிக்கு மின்னமு தானந்த சுந்தரிமேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.
வெளிப்படு வித்து விளைவறி வித்துத்தெளிப்படு வித்தென சிந்தையி னுள்ளேகளிப்படு வித்துக் கதிர்ப்படு சோதிஒளிப்படு வித்தென்னை யுய்யக்கொண் டாளே.
கொண்டனள் கோலங் கோடியவ னேகங்கள்கண்டன ளெண்ணென் கலையின் கணமாலைவிண்டனள் மேலை விரிகதிர் மூன்றையுந்தண்டலை மேல்நின்ற தையல்நல் லாளே.
தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியைமையலை நூக்கு மனோன்மணி மங்கையைப்பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்வெய்ய பவம்இனி மேவகி லாவே.
வேயன தோளி விரையுறு மென்மலர்ஏய குழலி யிளம்பிறை யேந்திழைதூய சடைமுடிச் சூலினி சுந்தரிஏயென துள்ளத் தினிதுஇருந் தாளே.
இனியதென் மூலை யிருக்குங் குமரிதனியொரு நாயகி தானே தலைவிதனிபடு வித்தநன் சார்பு படுத்துநனிபடு வித்துள்ளம் நாடிநின் றாளே.
நாடிகண் மூன்று ணடுவெழ ஞாளத்துக்கூடி யிருந்த குமரி குலக்கன்னிபாடகச் சீறடிப் பைம்பொற் சிலம்பொலிஊடக மேவி யுறங்குகின் றேனே.
உறங்கு மளவின் மனோன்மணி வந்துகறங்கு வளைக்கை கழுத்தாரப் புல்லிஉறங்கொளிர் தம்பலம் வாயி லுமிழ்ந்திட்டுஉறங்கல்ஐ யாவென் றுபாயந்தந் தாளே.
உபாய மளிக்கு மொருத்தியென் னுள்ளத்தபாய மறக்கெடுத் தன்பு விளைத்துச்சுவாவை விளைக்குஞ் சுழியகத் துள்ளேஅவாவை அடக்கிவைத் தஞ்சலென் றாளே.
அஞ்சொல் மொழியா ளருந்தவப் பெண்பிள்ளைசெஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழைதஞ்சமென் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கிஞ்சொல் லளிக்கு மிறைவியென் றாரே.
ஆருயி ராயு மருந்தவப் பெண்பிள்ளைகாரிய கோதையங் காரணி நாரணிஊரு முயிரு முலகு மொடுங்கிடுங்கோரியென் னுள்ளம் குலாவிநின் றாளே.
குலாவிய கோலக் குமரியென் னுள்ளம்நிலாவி யிருந்து நெடுநா ளனைத்தும்உலாவி யிருந்துணர்ந் துச்சியி னுள்ளேகலாவி யிருந்த கலைத்தலை யாளே.
கலைத்தலை நெற்றியோர் கண்ணுடைக் கண்ணுள்முலைத்தலை மங்கை முயங்கி இருக்கும்சிலைத்தலை யாய தெரிவினை நோக்கிஅலைத்தபூங் கொம்பினள் அங்கிருந் தாளே.
இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப்பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித்திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்றிஅருந்தவம் எய்தினள் ஆதியி னாளே.
ஆதி யனாதி யகாரண காரணிசோதி யசோதி சுகம்பர சுந்தரிமாது சமாதி மனோன்மணி மங்கலிஓதியென் னுள்ளத்து உடனியைந் தாளே.
இயைந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிநயந்தனள் அங்கே நமசிவ என்னும்அயன்தனை ஓரும் பதமது பற்றும்பெயர்ந்தனள் மற்றும் பிதற்றறுத் தாளே.
பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்முயற்றியின் முக்தி யருளு முதல்விகயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய்முகத்தருள் நோக்கமு முன்னுள்ள தாமே.
உள்ளத் திதையத்து நெஞ்சத் தொருமூன்றுள்பிள்ளைத் தடமுள்ளே பேசப் பிறந்ததுவள்ளற் றிருவின் வயிற்றுனுள் மாமாயைக்கள்ள வொளியின் கருத்தாகுங் கன்னியே.
கன்னியுங் கன்னி யழிந்திலன் காதலிதுன்னியங் கைவரைப் பெற்றனள் தூய்மொழிபன்னிய நன்னூற் பகவனு மங்குளஎன்னேயிம் மாயை யிருளது தானே.
இருளது சத்தி வெளியதெம் மண்ணல்பொருளது புண்ணியர் போகத்து ளின்பந்தெருளுறு சிந்தையைத் தெய்வமென் றெண்ணில்அருளது செய்யுமெம் மாதிப் பிரானே.
ஆதி யனாதியு மாய பராசக்திபாதி பராபரை மேலுறை பைந்தொடிமாது சமாதி மனோன்மணி மங்கலிஓதுமென் னுள்ளத்து உடன்முகிழ்த் தாளே.
ஓதிய வண்ணங் கலையி னுயர்கலைஆதியில் வேதமே யாமென் றறிகிலர்சாதியும் பேதமுந் தத்துவ மாய்நிற்பள்ஆதியென் றோதின ளாவின் கிழத்தியே.
ஆவின் கிழத்திநல் லாவடு தண்டுறைநாவின் கிழத்தி நலம்புகழ்ந் தேத்திடுந்தேவின் கிழத்தி திருவாஞ் சிவமங்கைமேவுங் கிழத்தி வினைகடிந் தாளே.
வினைகடிந் தாருள்ளத் துள்ளொளி மேவித்தனையடைந் தோர்க்கெல்லாந் தத்துவ மாய்நிற்பள்எனையடி மைகொண்ட வேந்திழை யீசன்கணவனைக் காண வனாதியு மாமே.
ஆதி யனாதி யகாரணி காரணிவேதம தாய்ந்தனள் வேதியர்க் காய்நின்றசோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும்பாதி பராபரை பன்னிரண் டாதியே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1075
1 / 50




