திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1115

நான்காம் தந்திரம்6. வயிரவி மந்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

இயைந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிநயந்தனள் அங்கே நமசிவ என்னும்அயன்தனை ஓரும் பதமது பற்றும்பெயர்ந்தனள் மற்றும் பிதற்றறுத் தாளே.

உரை

பாடல் #1114 இல் உள்ளபடி எம்மோடு சேர்ந்திருந்து அனைத்தையும் செய்வித்த இறைவியானவள், மிகவும் அழகிய ஆபரணங்களைச் சூடிக்கொண்டு, எமது உள்ளம் முழுவதும் பரவி நின்றாள். மகிழ்ச்சியோடு அங்கேயே வீற்றிருந்து, எம்மை 'நமசிவ' எனும் மந்திரத்தைத் தியானிக்க வைத்தாள். அதன் பயனால், பிரம்மனும் ஆராய்ந்து அறிய முடியாத இறைவனின் மாபெரும் திருவடிகளை உறுதியாகப் பற்றிக் கொள்ள வைத்து, அவனைத் தவிர மற்ற அனைத்துப் பற்றுக்களையும், வேறு வீணான எண்ணங்களையும் பேச்சுக்களையும் எம்மிடமிருந்து நீக்கி அருளினாள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1114 இல் உள்ளபடி எம்மோடு சேர்ந்திருந்து அனைத்தையும் செய்வித்த இறைவியானவள், மிகவும் அழகிய ஆபரணங்களைச் சூடிக்கொண்டு, எமது உள்ளம் முழுவதும் பரவி நின்றாள்.

  • வரி 2

    மகிழ்ச்சியோடு அங்கேயே வீற்றிருந்து, எம்மை 'நமசிவ' எனும் மந்திரத்தைத் தியானிக்க வைத்தாள்.

  • வரி 3

    அதன் பயனால், பிரம்மனும் ஆராய்ந்து அறிய முடியாத இறைவனின் மாபெரும் திருவடிகளை உறுதியாகப் பற்றிக் கொள்ள வைத்தாள்.

  • வரி 4

    அவனைத் தவிர மற்ற அனைத்துப் பற்றுக்களையும், வேறு வீணான எண்ணங்களையும் பேச்சுக்களையும் எம்மிடமிருந்து நீக்கி அருளினாள்.

திருமந்திரம் பாடல் #1115

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout