திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1114

நான்காம் தந்திரம்6. வயிரவி மந்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆதி யனாதி யகாரண காரணிசோதி யசோதி சுகம்பர சுந்தரிமாது சமாதி மனோன்மணி மங்கலிஓதியென் னுள்ளத்து உடனியைந் தாளே.

உரை

பாடல் #1113 இல் உள்ளபடி ஆதிப் பரம்பொருளாகிய இறைவி அனைத்திற்கும் ஆரம்பமாகவும் தனக்கென்று ஒரு ஆரம்பம் இல்லாமலும், அனைத்திற்கும் காரணமாகவும் தனக்கென்று ஒரு காரணம் இல்லாமலும், ஒளியாகவும் இருளாகவும், பேரின்பத்தை வழங்கும் அழகான இறைவியாகவும், சமாதி நிலையில் இறைவனுடன் சேர்ந்து மங்கையாக வீற்றிருந்து என்றும் நன்மையையே உடையவளாகவும் இருக்கின்றாள் என்பதை யாம் எப்போதும் போற்றிப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றோம். அவளும் எமது உள்ளத்திற்குள் எம்மோடு சேர்ந்திருந்து அனைத்தையும் எம்மைச் செய்வித்தாள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1113 இல் உள்ளபடி ஆதிப் பரம்பொருளாகிய இறைவி அனைத்திற்கும் ஆரம்பமாகவும் தனக்கென்று ஒரு ஆரம்பம் இல்லாமலும், அனைத்திற்கும் காரணமாகவும் தனக்கென்று ஒரு காரணம் இல்லாமலும் இருக்கின்றாள்.

  • வரி 2

    ஒளியாகவும் இருளாகவும், பேரின்பத்தை வழங்கும் அழகான இறைவியாகவும் இருக்கின்றாள்.

  • வரி 3

    சமாதி நிலையில் இறைவனுடன் சேர்ந்து மங்கையாக வீற்றிருந்து என்றும் நன்மையையே உடையவளாக இருக்கின்றாள் என்பதை யாம் எப்போதும் போற்றிப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றோம்.

  • வரி 4

    அவளும் எமது உள்ளத்திற்குள் எம்மோடு சேர்ந்திருந்து அனைத்தையும் எம்மைச் செய்வித்தாள்.

திருமந்திரம் பாடல் #1114

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout