தொடர்ந்து படிக்கread this section continuously
இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப்பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித்திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்றிஅருந்தவம் எய்தினள் ஆதியி னாளே.
உரைmeaning
பாடல் #1112 இல் உள்ளபடி எமக்குள் வீற்றிருந்த வயிரவி தேவியானவள் அழகிய ஆபரணங்களை சூடிய மங்கையாக எமது உள்ளம் முழுவதும் பரவி வீற்றிருந்தாள். அதன் பிறகு அங்கிருந்து இறைவனோடு சேர்ந்து ஒன்றியிருந்து, ஆதிப் பரம்பொருளாகிய அந்த இறைவி எம்மை அருமையான தவங்களைச் செய்ய வைத்து அருளினாள்.
As in verse 1112, Goddess Vairavi, who dwelt within us, spread through our whole heart as a maiden adorned with beautiful jewels. After that, embracing closely and going within, that primal Supreme Goddess joined and united with the Lord, and made us perform rare austerities, of her grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1112 இல் உள்ளபடி எமக்குள் வீற்றிருந்த வயிரவி தேவியானவள் அழகிய ஆபரணங்களை சூடிய மங்கையாக எமது உள்ளம் முழுவதும் பரவி வீற்றிருந்தாள்.
As in verse 1112, Goddess Vairavi, who dwelt within us, spread through our whole heart as a maiden adorned with beautiful jewels.
- வரி 2Line 2
அதன் பிறகு அவள் இறுகத் தழுவியவளாய் உள்ளே சென்றாள்.
After that, embracing closely, she went within.
- வரி 3Line 3
அங்கே இறைவனோடு சேர்ந்து ஒன்றியிருந்தாள்.
And there she joined and became united with the Lord.
- வரி 4Line 4
ஆதிப் பரம்பொருளாகிய அந்த இறைவி எம்மை அருமையான தவங்களைச் செய்ய வைத்து அருளினாள்.
And that primal Supreme Goddess made us perform rare austerities, of her grace.
திருமந்திரம் பாடல் #1113





