திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1112

நான்காம் தந்திரம்6. வயிரவி மந்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கலைத்தலை நெற்றியோர் கண்ணுடைக் கண்ணுள்முலைத்தலை மங்கை முயங்கி இருக்கும்சிலைத்தலை யாய தெரிவினை நோக்கிஅலைத்தபூங் கொம்பினள் அங்கிருந் தாளே.

உரை

பாடல் #1111 இல் உள்ளபடி எமது உடலுக்குள் இயங்கும் அனைத்துக் கலைகளுக்கும் தலைவியாக இருக்கும் வயிரவி தேவியானவள், தனது ஞானக்கண்ணைக் கொண்டு எமது நெற்றிக்குள் ஞானக் கண்ணாக வீற்றிருக்கிறாள். அவள் எமக்குள் இயங்கிக்கொண்டே இருந்து எம்மைச் சாதகம் செய்ய வைத்து அருளுகின்றாள். அதன் பயனாக, ஒலி ஒளியின் தலைவியான அந்தத் தேவியே எமது ஞானக் கண்ணைத் திறந்து, அதன் மூலம் இருந்த இடத்திலேயே அனைத்தையும் பார்க்க வைத்து அருளுகின்றாள். அதன் பிறகு, ஒரு பூங்கொடி ஒரு கொம்பைச் சுற்றிக்கொண்டே மேலெழுவது போல, எமக்குள் அசைந்துகொண்டே சுற்றி வீற்றிருக்கின்றாள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1111 இல் உள்ளபடி எமது உடலுக்குள் இயங்கும் அனைத்துக் கலைகளுக்கும் தலைவியாக இருக்கும் வயிரவி தேவியானவள், தனது ஞானக்கண்ணைக் கொண்டு எமது நெற்றிக்குள் ஞானக் கண்ணாக வீற்றிருக்கிறாள்.

  • வரி 2

    அவள் எமக்குள் இயங்கிக்கொண்டே இருந்து எம்மைச் சாதகம் செய்ய வைத்து அருளுகின்றாள்.

  • வரி 3

    அதன் பயனாக, ஒலி ஒளியின் தலைவியான அந்தத் தேவியே எமது ஞானக் கண்ணைத் திறந்து, அதன் மூலம் இருந்த இடத்திலேயே அனைத்தையும் பார்க்க வைத்து அருளுகின்றாள்.

  • வரி 4

    அதன் பிறகு, ஒரு பூங்கொடி ஒரு கொம்பைச் சுற்றிக்கொண்டே மேலெழுவது போல, எமக்குள் அசைந்துகொண்டே சுற்றி வீற்றிருக்கின்றாள்.

திருமந்திரம் பாடல் #1112

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout