தொடர்ந்து படிக்கread this section continuously
குலாவிய கோலக் குமரியென் னுள்ளம்நிலாவி யிருந்து நெடுநா ளனைத்தும்உலாவி யிருந்துணர்ந் துச்சியி னுள்ளேகலாவி யிருந்த கலைத்தலை யாளே.
உரைmeaning
பாடல் #1110 இல் உள்ளபடி எமது உள்ளத்திற்குள் மகிழ்ச்சியுடன் இருந்த இறைவியானவள் எமது உள்ளம் முழுவதும் பரவி நீண்ட காலம் இருந்து குமரியாகி, அதன் பிறகு எமது உடல் முழுவதும் சென்று, எமக்குள் செயல்படும் கலைகள் அனைத்தையும் எமது தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் ஒன்று சேர்த்து, அந்தக் கலைகள் அனைத்திற்கும் தலைவியாக வீற்றிருந்தாள்.
As in verse 1110, the Goddess who dwelt with joy within our heart spread through our whole heart, remained there for a long time as a young maiden, and then, going through our whole body, gathered together all the kalais at work within us at the sahasradala at the crown of our head, and stood as the chief over all those kalais.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1110 இல் உள்ளபடி எமது உள்ளத்திற்குள் மகிழ்ச்சியுடன் இருந்த இறைவியானவள் எமது உள்ளம் முழுவதும் பரவி நீண்ட காலம் இருந்தாள்.
As in verse 1110, the Goddess who dwelt with joy within our heart spread through our whole heart and remained there for a long time.
- வரி 2Line 2
அவ்வாறே இருந்து குமரியாக ஆனாள்.
And so remaining, she became a young maiden.
- வரி 3Line 3
அதன் பிறகு எமது உடல் முழுவதும் சென்று, எமக்குள் செயல்படும் கலைகள் அனைத்தையும் எமது தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் ஒன்று சேர்த்தாள்.
Then, going through our whole body, she gathered together all the kalais at work within us at the sahasradala at the crown of our head.
- வரி 4Line 4
அந்தக் கலைகள் அனைத்திற்கும் தலைவியாக வீற்றிருந்தாள்.
And she stood as the chief over all those kalais.
திருமந்திரம் பாடல் #1111





