திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1110

நான்காம் தந்திரம்6. வயிரவி மந்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆருயி ராயு மருந்தவப் பெண்பிள்ளைகாரிய கோதையங் காரணி நாரணிஊரு முயிரு முலகு மொடுங்கிடுங்கோரியென் னுள்ளம் குலாவிநின் றாளே.

உரை

வயிரவி தேவியானவள் செய்வதற்கு மிகவும் அரிதான தவங்களை ஆராய்ந்து செய்யும் யோகியர்களுக்கு மட்டுமே ஆரம்ப காலத்தில் இளமையுடன் வெளிப்படுவாள். அவளே அனைத்தையும் செயல்படுத்தும் காரியமாகவும், அந்தச் செயல்களுக்கான காரணமாகிய இறைவனோடு சேர்ந்திருந்து அனைத்துச் செயல்களுக்கும் சக்தியைக் கொடுப்பவளாகவும் இருக்கின்றாள். அண்ட சராசரங்களிலுள்ள அனைத்து உலகங்களும், அதில் வாழும் அனைத்து உயிர்களும் அழிகின்ற காலத்தில் சென்று சேருகின்ற இடமாக அவளே இருக்கின்றாள். ஊழிக் காலத்தில் கோர உருவம் கொண்டிருக்கும் அவளே எமது உள்ளத்திற்குள் சாந்த சொரூபியாக மிகவும் மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கின்றாள்.

வரி வாரியாக

  • வரி 1

    வயிரவி தேவியானவள் செய்வதற்கு மிகவும் அரிதான தவங்களை ஆராய்ந்து செய்யும் யோகியர்களுக்கு மட்டுமே ஆரம்ப காலத்தில் இளமையுடன் வெளிப்படுவாள்.

  • வரி 2

    அவளே அனைத்தையும் செயல்படுத்தும் காரியமாகவும், அந்தச் செயல்களுக்கான காரணமாகிய இறைவனோடு சேர்ந்திருந்து அனைத்துச் செயல்களுக்கும் சக்தியைக் கொடுப்பவளாகவும் இருக்கின்றாள்.

  • வரி 3

    அண்ட சராசரங்களிலுள்ள அனைத்து உலகங்களும், அதில் வாழும் அனைத்து உயிர்களும் அழிகின்ற காலத்தில் சென்று சேருகின்ற இடமாக அவளே இருக்கின்றாள்.

  • வரி 4

    ஊழிக் காலத்தில் கோர உருவம் கொண்டிருக்கும் அவளே எமது உள்ளத்திற்குள் சாந்த சொரூபியாக மிகவும் மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கின்றாள்.

திருமந்திரம் பாடல் #1110

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout