திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1109

நான்காம் தந்திரம்6. வயிரவி மந்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அஞ்சொல் மொழியா ளருந்தவப் பெண்பிள்ளைசெஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழைதஞ்சமென் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கிஞ்சொல் லளிக்கு மிறைவியென் றாரே.

உரை

பாடல் #1108 இல் உள்ளபடி எதற்கும் அஞ்ச வேண்டாம், நான் இருக்கின்றேன் என்று எமக்கு அபயம் அருளிய இறைவியானவள், செய்வதற்கு மிகவும் அரிதான தவங்களைச் செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஆரம்ப நிலையில் உணரப்படுகின்ற குழந்தை போன்ற பெண் தெய்வம் ஆவாள். அவள் சிறப்பான சொல்லைச் சொல்லும் மழலைப் பேச்சை உடையவள்; மிகவும் அழகான உடைகளையும் ஆபரணங்களையும் அணிந்தவள். அவளைத் தஞ்சம் என்று எண்ணி அவளது மேன்மையான திருவடிகளைப் போற்றி வணங்குபவர்களுக்குப் பேரின்பத்தை வழங்கும் இனிமையான சொல்லை அளித்து அருள்வாள் என்று அவளை அறிந்தவர்கள் சொல்வார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1108 இல் உள்ளபடி எதற்கும் அஞ்ச வேண்டாம், நான் இருக்கின்றேன் என்று எமக்கு அபயம் அருளிய இறைவியானவள், செய்வதற்கு மிகவும் அரிதான தவங்களைச் செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஆரம்ப நிலையில் உணரப்படுகின்ற குழந்தை போன்ற பெண் தெய்வம் ஆவாள்.

  • வரி 2

    அவள் சிறப்பான சொல்லைச் சொல்லும் மழலைப் பேச்சை உடையவள்.

  • வரி 3

    மிகவும் அழகான உடைகளையும் ஆபரணங்களையும் அணிந்தவள்.

  • வரி 4

    அவளைத் தஞ்சம் என்று எண்ணி அவளது மேன்மையான திருவடிகளைப் போற்றி வணங்குபவர்களுக்குப் பேரின்பத்தை வழங்கும் இனிமையான சொல்லை அளித்து அருள்வாள் என்று அவளை அறிந்தவர்கள் சொல்வார்கள்.

திருமந்திரம் பாடல் #1109

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout