திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1108

நான்காம் தந்திரம்6. வயிரவி மந்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

உபாய மளிக்கு மொருத்தியென் னுள்ளத்தபாய மறக்கெடுத் தன்பு விளைத்துச்சுவாவை விளைக்குஞ் சுழியகத் துள்ளேஅவாவை அடக்கிவைத் தஞ்சலென் றாளே.

உரை

பாடல் #1107 இல் உள்ளபடி விழிப்பு நிலையிலேயே பேரின்பத்தில் லயித்திருக்கும் வழிமுறையை அருளிய இறைவி, எமது உள்ளத்திற்குள் இருந்த பயம் பற்று ஆகிய அனைத்தையும் சுத்தமாக நீக்கி அருளி, உலகப் பற்றுக்களில் சிக்கிக் கொண்டு எப்போதும் அலைந்து கொண்டிருந்த எமது மனதின் ஆசையை அடக்கி வைத்து, எதற்கும் அஞ்ச வேண்டாம், நான் இருக்கின்றேன் என்று எமக்கு அபயம் அருளினாள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1107 இல் உள்ளபடி விழிப்பு நிலையிலேயே பேரின்பத்தில் லயித்திருக்கும் வழிமுறையை அருளிய இறைவி,

  • வரி 2

    எமது உள்ளத்திற்குள் இருந்த பயம் பற்று ஆகிய அனைத்தையும் சுத்தமாக நீக்கி அருளி,

  • வரி 3

    உலகப் பற்றுக்களில் சிக்கிக் கொண்டு எப்போதும் அலைந்து கொண்டிருந்த எமது மனதின் ஆசையை அடக்கி வைத்து,

  • வரி 4

    எதற்கும் அஞ்ச வேண்டாம், நான் இருக்கின்றேன் என்று எமக்கு அபயம் அருளினாள்.

திருமந்திரம் பாடல் #1108

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout