திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1107

நான்காம் தந்திரம்6. வயிரவி மந்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

உறங்கு மளவின் மனோன்மணி வந்துகறங்கு வளைக்கை கழுத்தாரப் புல்லிஉறங்கொளிர் தம்பலம் வாயி லுமிழ்ந்திட்டுஉறங்கல்ஐ யாவென் றுபாயந்தந் தாளே.

உரை

பாடல் #1106 இல் உள்ளபடி தன்னை மறந்து ஆழ்நிலையில் லயித்திருக்கும் போது, வயிரவியானவள், இறைவனும் இறைவியும் சேர்ந்திருக்கும் மனோன்மணி எனும் அம்சமாக எமக்குள் வந்து, மென்மையாகச் சத்தம் செய்யும் வளையல்கள் அணிந்த தம் திருக்கரங்களால் எமது கழுத்தை வளைத்துப் பிடித்துக்கொண்டு, ஆழ்நிலையில் யாம் லயித்திருக்கும் நிலையிலேயே எமது வாயில் தாம்பூலத்தை உமிழ்ந்து கொடுத்துவிட்டு, 'அனைத்தையும் மறந்த நிலையில் லயித்துக் கொண்டேயிராதே, அடியவனே' என்று கூறி, எப்போதும் விழிப்பு நிலையிலேயே பேரின்பத்தில் லயித்திருக்கும் வழிமுறையையும் தந்தருளினாள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1106 இல் உள்ளபடி தன்னை மறந்து ஆழ்நிலையில் லயித்திருக்கும் போது, வயிரவியானவள், இறைவனும் இறைவியும் சேர்ந்திருக்கும் மனோன்மணி எனும் அம்சமாக எமக்குள் வந்தாள்.

  • வரி 2

    மென்மையாகச் சத்தம் செய்யும் வளையல்கள் அணிந்த தம் திருக்கரங்களால் எமது கழுத்தை வளைத்துப் பிடித்துக்கொண்டாள்.

  • வரி 3

    ஆழ்நிலையில் யாம் லயித்திருக்கும் நிலையிலேயே எமது வாயில் தாம்பூலத்தை உமிழ்ந்து கொடுத்துவிட்டு, 'அனைத்தையும் மறந்த நிலையில் லயித்துக் கொண்டேயிராதே, அடியவனே' என்று கூறினாள்.

  • வரி 4

    எப்போதும் விழிப்பு நிலையிலேயே பேரின்பத்தில் லயித்திருக்கும் வழிமுறையையும் தந்தருளினாள்.

திருமந்திரம் பாடல் #1107

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout