தொடர்ந்து படிக்கread this section continuously
நாடிகண் மூன்று ணடுவெழ ஞாளத்துக்கூடி யிருந்த குமரி குலக்கன்னிபாடகச் சீறடிப் பைம்பொற் சிலம்பொலிஊடக மேவி யுறங்குகின் றேனே.
உரைmeaning
பாடல் #1105 இல் உள்ளபடி எமது உள்ளத்தையே விரும்பி வீற்றிருக்கும் வயிரவியானவள், எமது உடலுக்குள் இருக்கும் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளில், நடுவில் உயர்ந்திருக்கும் சுழுமுனை நாடி வழியே, மூலாதாரத்திலிருந்து, தமது கால்களில் தண்டையை அணிந்திருக்கும் இறைவனுடன் சேர்ந்து, நன்மைகளின் மொத்த உருவமாக இருக்கும் இறைவியும் தன் திருவடிகளில் தூய்மையான பொன் சிலம்புகளை அணிந்துகொண்டு, ஆடிக்கொண்டே மேலெழுந்து வருகிறாள். இவர்கள் இருவரின் ஆடலிலிருந்து வரும் ஓசை, எமக்குள் முழுவதும் பரவி ஒலிக்க, அதிலேயே யான் லயித்திருக்கிறேன்.
As in verse 1105, Vairavi, who dwells desiring my heart alone, rises up, within my body, through the central and elevated sushumna nadi among the three nadis, ida, pingala and sushumna, from the muladhara, together with the Lord who wears anklets on his feet. She, the Goddess who is the whole form of all good, wears pure golden anklets on her own sacred feet and rises, dancing, upward. As the sound of their dance together spreads and resounds fully within me, I am lost in it.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1105 இல் உள்ளபடி எமது உள்ளத்தையே விரும்பி வீற்றிருக்கும் வயிரவியானவள், எமது உடலுக்குள் இருக்கும் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளில், நடுவில் உயர்ந்திருக்கும் சுழுமுனை நாடி வழியே, மூலாதாரத்திலிருந்து எழுகிறாள்.
As in verse 1105, Vairavi, who dwells desiring my heart alone, rises up, within my body, through the central and elevated sushumna nadi among the three nadis, ida, pingala and sushumna, from the muladhara.
- வரி 2Line 2
தமது கால்களில் தண்டையை அணிந்திருக்கும் இறைவனுடன் சேர்ந்து குலக் கன்னியாக எழுகிறாள்.
She rises together with the Lord who wears anklets on his feet, as the noble ever-young one.
- வரி 3Line 3
நன்மைகளின் மொத்த உருவமாக இருக்கும் இறைவி, தன் திருவடிகளில் தூய்மையான பொன் சிலம்புகளை அணிந்துகொண்டு, ஆடிக்கொண்டே மேலெழுந்து வருகிறாள்.
The Goddess, who is the whole form of all good, wears pure golden anklets on her own sacred feet and rises, dancing, upward.
- வரி 4Line 4
இவர்கள் இருவரின் ஆடலிலிருந்து வரும் ஓசை, எமக்குள் முழுவதும் பரவி ஒலிக்க, அதிலேயே யான் லயித்திருக்கிறேன்.
As the sound of their dance together spreads and resounds fully within me, I am lost in it.
திருமந்திரம் பாடல் #1106





