தொடர்ந்து படிக்கread this section continuously
இனியதென் மூலை யிருக்குங் குமரிதனியொரு நாயகி தானே தலைவிதனிபடு வித்தநன் சார்பு படுத்துநனிபடு வித்துள்ளம் நாடிநின் றாளே.
உரைmeaning
பாடல் #1104 இல் உள்ளபடி எமது உள்ளத்தையும் தனக்கு விருப்பமான இடமாக ஏற்றுக்கொண்ட வயிரவி தேவி, அதில் ஓர் இடத்தில் இளமையுடன் எமது உள்ளத்தின் நாயகியாகத் தான் ஒருவளே வீற்றிருந்து, பின்பு எமது உள்ளத்தின் தலைவியாகவே ஆகிவிட்டாள். அதன் பிறகு, உலகம், உடல், ஆசை, பந்தம், பாசம் ஆகியவற்றின் மேலுள்ள பற்றிலிருந்து எமது உள்ளத்தைப் பிரித்துத் தனியாக்கி, அதை நன்மையே உருவான இறைவனுடன் சேர்ந்திருக்க வைத்து, எமது உள்ளம் முழுவதும் நன்மையே மிகுதியாக இருக்கும்படி செய்து, இறைவன் வீற்றிருக்கும் எமது உள்ளத்தையே விரும்பி, அங்கே வீற்றிருக்கிறாள்.
As in verse 1104, Vairavi Devi, who accepted my heart too as a place dear to her, came to dwell there, ever young, as its sole mistress in one part of it, and then became the ruler of my whole heart. After that, she separated my heart from its attachment to the world, the body, desire, bondage and ties, made it dwell united with the Lord who is goodness itself, made my whole heart abound in goodness, and, desiring my heart where the Lord himself dwells, dwells there herself.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1104 இல் உள்ளபடி எமது உள்ளத்தையும் தனக்கு விருப்பமான இடமாக ஏற்றுக்கொண்ட வயிரவி தேவி, அதில் ஓர் இடத்தில் இளமையுடன் எமது உள்ளத்தின் நாயகியாகத் தான் ஒருவளே வீற்றிருந்தாள்.
As in verse 1104, Vairavi Devi, who accepted my heart too as a place dear to her, came to dwell there, ever young, as its sole mistress in one part of it.
- வரி 2Line 2
பின்பு எமது உள்ளத்தின் தலைவியாகவே ஆகிவிட்டாள்.
Then she became the ruler of my whole heart.
- வரி 3Line 3
அதன் பிறகு, உலகம், உடல், ஆசை, பந்தம், பாசம் ஆகியவற்றின் மேலுள்ள பற்றிலிருந்து எமது உள்ளத்தைப் பிரித்துத் தனியாக்கி, நன்மையே உருவான இறைவனுடன் சேர்ந்திருக்க வைத்தாள்.
After that, she separated my heart from its attachment to the world, the body, desire, bondage and ties, and made it dwell united with the Lord who is goodness itself.
- வரி 4Line 4
எமது உள்ளம் முழுவதும் நன்மையே மிகுதியாக இருக்கும்படி செய்து, இறைவன் வீற்றிருக்கும் எமது உள்ளத்தையே விரும்பி, அங்கே வீற்றிருக்கிறாள்.
She made my whole heart abound in goodness, and, desiring my heart where the Lord himself dwells, dwells there herself.
திருமந்திரம் பாடல் #1105





