தொடர்ந்து படிக்கread this section continuously
வேயன தோளி விரையுறு மென்மலர்ஏய குழலி யிளம்பிறை யேந்திழைதூய சடைமுடிச் சூலினி சுந்தரிஏயென துள்ளத் தினிதுஇருந் தாளே.
உரைmeaning
பாடல் #1103 இல் உள்ளபடி சாதகர்களின் பிறவிகளை நீக்கியருளும் வயிரவி தேவியின் உருவத்தை இப்பாடலில் அறியலாம். மூங்கில் போன்ற மெல்லிய அழகுடன் வலிமை பொருந்திய தோள்களை உடையவளும், நறுமணம் கமழும் மென்மையான மலர்களைச் சூடியவளும், பேரழகு பொருந்திய கூந்தலை உடையவளும், இளம் பிறை நிலவைத் தன் தலையில் ஆபரணமாகச் சூடியவளும், தூய்மையான சடைமுடியைக் கொண்டவளும், திரிசூலத்தைத் தன் கையில் ஏந்தியவளும், பேரழகு பொருந்தியவளுமான வயிரவி தேவி, எமது உள்ளத்தைத் தனக்கு விருப்பமான இடமாக ஏற்றுக்கொண்டு, அதிலே இன்பத்துடன் வீற்றிருந்தாள்.
As in verse 1103, this verse tells of the form of Vairavi Devi, who graciously removes the seeker's births. With shoulders slender and beautiful as bamboo, wearing fragrant soft flowers, of surpassing beautiful hair, wearing the young crescent moon as an ornament on her head, with pure matted locks, bearing the trident in her hand, and of surpassing beauty, Vairavi Devi accepted my own heart as a place dear to her, and dwelt there happily.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1103 இல் உள்ளபடி சாதகர்களின் பிறவிகளை நீக்கியருளும் வயிரவி தேவியின் உருவத்தை இப்பாடலில் அறியலாம்.
As in verse 1103, this verse tells of the form of Vairavi Devi, who graciously removes the seeker's births.
- வரி 2Line 2
மூங்கில் போன்ற மெல்லிய அழகுடன் வலிமை பொருந்திய தோள்களை உடையவளும், நறுமணம் கமழும் மென்மையான மலர்களைச் சூடியவளும், பேரழகு பொருந்திய கூந்தலை உடையவளும் ஆவாள்.
She has shoulders slender and beautiful as bamboo, wears fragrant soft flowers, and has surpassing beautiful hair.
- வரி 3Line 3
இளம் பிறை நிலவைத் தன் தலையில் ஆபரணமாகச் சூடியவளும், தூய்மையான சடைமுடியைக் கொண்டவளும், திரிசூலத்தைத் தன் கையில் ஏந்தியவளுமாக, பேரழகு பொருந்தியவளாக இருக்கிறாள்.
She wears the young crescent moon as an ornament on her head, has pure matted locks, bears the trident in her hand, and is of surpassing beauty.
- வரி 4Line 4
வயிரவி தேவி, எமது உள்ளத்தைத் தனக்கு விருப்பமான இடமாக ஏற்றுக்கொண்டு, அதிலே இன்பத்துடன் வீற்றிருந்தாள்.
Vairavi Devi accepted my own heart as a place dear to her, and dwelt there happily.
திருமந்திரம் பாடல் #1104





