தொடர்ந்து படிக்கread this section continuously
தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியைமையலை நூக்கு மனோன்மணி மங்கையைப்பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்வெய்ய பவம்இனி மேவகி லாவே.
உரைmeaning
பாடல் #1102 இல் உள்ளபடி சாதகரை உலகத்தோடு பிணைத்து நன்மை புரிகின்ற வயிரவியானவள், உலகத்தார் செய்யும் அனைத்துவிதத் தவத்தின் தலைவியாகவும் இருக்கிறாள். அந்தத் தவத்தின் பயனாக, சாதகரின் மயக்கத்தை நீக்கியருளும் மனோன்மணியாகவும் இருக்கிறாள். அவளை அமைதியான மன நிலையில், வேறு எண்ணங்களின்றிப் புகழ்ந்து போற்றி வணங்குங்கள். அப்படி வணங்கினால், கொடுமையான இந்த உலக வாழ்க்கையை மறுபடியும் அனுபவிக்காதபடி, உங்கள் பிறவிகளை நீக்கியருளுவாள்.
As in verse 1102, Vairavi, who binds the seeker with the world and does good, is also the mistress of every kind of austerity that people practice. As the fruit of that austerity, she is Manonmani, who graciously removes the seeker's confusion. Praise her, revere her and bow to her, calmly and with no other thoughts. If you thus bow to her, she will graciously remove your births, so that you need not undergo this cruel worldly life again.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1102 இல் உள்ளபடி சாதகரை உலகத்தோடு பிணைத்து நன்மை புரிகின்ற வயிரவியானவள், உலகத்தார் செய்யும் அனைத்துவிதத் தவத்தின் தலைவியாகவும் இருக்கிறாள்.
As in verse 1102, Vairavi, who binds the seeker with the world and does good, is also the mistress of every kind of austerity that people practice.
- வரி 2Line 2
அந்தத் தவத்தின் பயனாக, சாதகரின் மயக்கத்தை நீக்கியருளும் மனோன்மணியாகவும் இருக்கிறாள்.
As the fruit of that austerity, she is Manonmani, who graciously removes the seeker's confusion.
- வரி 3Line 3
அவளை அமைதியான மன நிலையில், வேறு எண்ணங்களின்றிப் புகழ்ந்து போற்றி வணங்குங்கள்.
Praise her, revere her and bow to her, calmly and with no other thoughts.
- வரி 4Line 4
அப்படி வணங்கினால், கொடுமையான இந்த உலக வாழ்க்கையை மறுபடியும் அனுபவிக்காதபடி, உங்கள் பிறவிகளை நீக்கியருளுவாள்.
If you thus bow to her, she will graciously remove your births, so that you need not undergo this cruel worldly life again.
திருமந்திரம் பாடல் #1103





