தொடர்ந்து படிக்கread this section continuously
கொண்டனள் கோலங் கோடியவ னேகங்கள்கண்டன ளெண்ணென் கலையின் கணமாலைவிண்டனள் மேலை விரிகதிர் மூன்றையுந்தண்டலை மேல்நின்ற தையல்நல் லாளே.
உரைmeaning
பாடல் #1101 இல் உள்ளபடி எம்மை உய்யுமாறு ஆட்கொண்ட சோதியான வயிரவி, உயிர்களும் உய்வதற்காக, அவரவர் மனப் பக்குவத்திற்கு ஏற்பப் பல கோடித் தோற்றங்களுடன் உயிர்களின் உள்ளேயே இருக்கிறாள். உயிர்களின் அறியாமையை நீக்குவதற்கு அறுபத்து நான்கு கலைகளையும் அருளி, அவற்றின் உச்சமாகவும் இருக்கிறாள். உயிர்களின் வெளிப்புற இருளை நீக்குவதற்கு மூன்று வகை ஒளிகளையும் அருளினாள். சாதகர்களின் தலை உச்சிக்கு மேல் வீற்றிருந்து, உலகத்தை அவரோடு பிணைத்து நன்மை புரிபவளாக இருக்கிறாள்.
As in verse 1101, Vairavi, the form of light who took possession of me and saved me, dwells within beings too, in countless forms suited to each soul's disposition, so that they too may be saved. To remove the ignorance within beings she graciously gave sixty-four kalais, and is herself their culmination. To remove the outer darkness of beings she graciously gave three kinds of light. Dwelling above the crown of seekers, she binds the world with them and does good.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1101 இல் உள்ளபடி எம்மை உய்யுமாறு ஆட்கொண்ட சோதியான வயிரவி, உயிர்களும் உய்வதற்காக, அவரவர் மனப் பக்குவத்திற்கு ஏற்பப் பல கோடித் தோற்றங்களுடன் உயிர்களின் உள்ளேயே இருக்கிறாள்.
As in verse 1101, Vairavi, the form of light who took possession of me and saved me, dwells within beings too, in countless forms suited to each soul's disposition, so that they too may be saved.
- வரி 2Line 2
உயிர்களின் அறியாமையை நீக்குவதற்கு அறுபத்து நான்கு கலைகளையும் அருளி, அவற்றின் உச்சமாகவும் இருக்கிறாள்.
To remove the ignorance within beings she graciously gave sixty-four kalais, and is herself their culmination.
- வரி 3Line 3
உயிர்களின் வெளிப்புற இருளை நீக்குவதற்கு மூன்று வகை ஒளிகளையும் அருளினாள்.
To remove the outer darkness of beings she graciously gave three kinds of light.
- வரி 4Line 4
சாதகர்களின் தலை உச்சிக்கு மேல் வீற்றிருந்து, உலகத்தை அவரோடு பிணைத்து நன்மை புரிபவளாக இருக்கிறாள்.
Dwelling above the crown of seekers, she binds the world with them and does good.
திருமந்திரம் பாடல் #1102





