தொடர்ந்து படிக்கread this section continuously
வெளிப்படு வித்து விளைவறி வித்துத்தெளிப்படு வித்தென சிந்தையி னுள்ளேகளிப்படு வித்துக் கதிர்ப்படு சோதிஒளிப்படு வித்தென்னை யுய்யக்கொண் டாளே.
உரைmeaning
பாடல் #1100 இல் உள்ளபடி அனைத்திற்கும் மேலான சதாசிவத்தை வெளிப்படுத்தி அருளிய வயிரவி தேவி, அதன் பயனாகப் பேரறிவு ஞானத்தைக் கொடுத்து, அந்த ஞானத்தின் பயனாகத் தெளிவான சிந்தனையைக் கொடுத்து, அதன் பயனாகப் பேரின்பத்தை அடையச் செய்து, அதன் பயனாகப் பெருஞ்சோதி வடிவான இறைவனுடன் கதிர் வடிவான எம் ஆன்மாவைச் சேரவைத்து, அதன் பயனாக என்னையும் சோதி உருவம் பெறச் செய்து, எமது ஆன்மா முக்தி அடையும்படி செய்து, என்னை முழுவதும் ஆட்கொண்டாள்.
As in verse 1100, Vairavi Devi, who graciously revealed the supreme Sadashivam above all, thereby gave the fruit of great wisdom; through that wisdom's fruit gave clear thought; through that fruit gave the attainment of great bliss; through that fruit united my soul, in the form of a ray, with the Lord who is the form of the great light; through that fruit gave me too the form of light; and made my soul attain liberation, taking full possession of me.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1100 இல் உள்ளபடி அனைத்திற்கும் மேலான சதாசிவத்தை வெளிப்படுத்தி அருளிய வயிரவி தேவி, அதன் பயனாகப் பேரறிவு ஞானத்தைக் கொடுத்தாள்.
As in verse 1100, Vairavi Devi, who graciously revealed the supreme Sadashivam above all, thereby gave the fruit of great wisdom.
- வரி 2Line 2
அந்த ஞானத்தின் பயனாகத் தெளிவான சிந்தனையைக் கொடுத்து, அதன் பயனாகப் பேரின்பத்தை அடையச் செய்தாள்.
Through that wisdom's fruit she gave clear thought, and through that fruit's own made me attain great bliss.
- வரி 3Line 3
அதன் பயனாகப் பெருஞ்சோதி வடிவான இறைவனுடன் கதிர் வடிவான எம் ஆன்மாவைச் சேரவைத்து, என்னையும் சோதி உருவம் பெறச் செய்தாள்.
Through that fruit's own she united my soul, in the form of a ray, with the Lord who is the form of the great light, and made me too attain the form of light.
- வரி 4Line 4
எமது ஆன்மா முக்தி அடையும்படி செய்து, என்னை முழுவதும் ஆட்கொண்டாள்.
She made my soul attain liberation, taking full possession of me.
திருமந்திரம் பாடல் #1101





