தொடர்ந்து படிக்கread this section continuously
கோலக் குழலி குலாய புருவத்தள்நீலக் குவளை மலர்கின்ற கண்ணினாள்ஆலிக்கு மின்னமு தானந்த சுந்தரிமேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.
உரைmeaning
பாடல் #1099 இல் உள்ளபடி சாதகரின் உடலும் உயிரும் இறைவனாகவே ஆகிவிடுவதற்குக் காரணமான, மாபெரும் கருணையுடைய வயிரவியின் வடிவத்தை இப்பாடலில் அறியலாம். அழகிய கூந்தலுடன், வளைந்த புருவங்களுடன், நீல நிறத்தில் மலர்ந்த குவளை மலர் போன்ற கண்களுடன், இனிமையான அமுதத்துடன் சேர்ந்த பேரானந்தமாக இருக்கும் பேரழகு பொருந்திய வயிரவியே, அனைத்திற்கும் மேலான சதாசிவத்தை வெளிப்படுத்தி அருளுகிறாள்.
As in verse 1099, this verse tells of the form of Vairavi of great compassion, who is the cause of the seeker's body and life itself becoming God. Vairavi, with beautiful hair, curved eyebrows, and eyes like blooming blue water-lilies, in great bliss joined with sweet nectar, and of surpassing beauty, is the one who graciously reveals the supreme Sadashivam above all.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1099 இல் உள்ளபடி சாதகரின் உடலும் உயிரும் இறைவனாகவே ஆகிவிடுவதற்குக் காரணமான, மாபெரும் கருணையுடைய வயிரவியின் வடிவத்தை இப்பாடலில் அறியலாம்.
As in verse 1099, this verse tells of the form of Vairavi of great compassion, who is the cause of the seeker's body and life itself becoming God.
- வரி 2Line 2
அழகிய கூந்தலுடன், வளைந்த புருவங்களுடன், நீல நிறத்தில் மலர்ந்த குவளை மலர் போன்ற கண்களுடன் இருக்கிறாள்.
She has beautiful hair, curved eyebrows, and eyes like blooming blue water-lilies.
- வரி 3Line 3
இனிமையான அமுதத்துடன் சேர்ந்த பேரானந்தமாக, பேரழகு பொருந்தியவளாக இருக்கிறாள்.
She is in great bliss joined with sweet nectar, and of surpassing beauty.
- வரி 4Line 4
அவளே அனைத்திற்கும் மேலான சதாசிவத்தை வெளிப்படுத்தி அருளுகிறாள்.
She is the one who graciously reveals the supreme Sadashivam above all.
திருமந்திரம் பாடல் #1100





