தொடர்ந்து படிக்கread this section continuously
ஆதி வயிரவி கன்னித் துறைமன்னிஓதி யுணரி லுடலுயி ரீசனாம்பேதை யுலகிற் பிறவிகள் நாசமாம்ஓத வுலவாத கோலமொன் றாகுமே.
உரைmeaning
பாடல் #1098 இல் உள்ளபடி, ஆதிசக்தியான வயிரவியே எப்போதும் இளமையுடன் அண்டசராசரங்களிலுள்ள அனைத்திற்கும் அரசியாக வீற்றிருக்கிறாள். அவளுடைய மந்திரத்தைச் செபித்துத் தமக்குள் அவளை உணரும் சாதகர்களின் உடலும் உயிரும் ஈசனாகவே ஆகும் என்றும், மாயையால் மயங்கியிருக்கும் இவ்வுலகில் மீண்டும் பிறவி எடுக்காதபடி எப்போதும் அழியாத ஒரு கோலத்தை அவர்கள் அடைவார்கள் என்றும் இப்பாடல் அறிவிக்கிறது.
As in verse 1098, Vairavi, the primal Shakti, dwells ever young as queen over everything in the universe. This verse declares that the body and life itself of seekers who recite her mantra and realize her within themselves become Iswaran, and that in this maya-deluded world they attain, without ever being born again, a form that never fades.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1098 இல் உள்ளபடி, ஆதிசக்தியான வயிரவியே எப்போதும் இளமையுடன் அண்டசராசரங்களிலுள்ள அனைத்திற்கும் அரசியாக வீற்றிருக்கிறாள்.
As in verse 1098, Vairavi, the primal Shakti, dwells ever young as queen over everything in the universe.
- வரி 2Line 2
அவளுடைய மந்திரத்தைச் செபித்துத் தமக்குள் அவளை உணரும் சாதகர்களின் உடலும் உயிரும் ஈசனாகவே ஆகும்.
This verse declares that the body and life itself of seekers who recite her mantra and realize her within themselves become Iswaran.
- வரி 3Line 3
மாயையால் மயங்கியிருக்கும் இவ்வுலகில் மீண்டும் பிறவி எடுக்காதபடி,
In this maya-deluded world, so that they need not be born again,
- வரி 4Line 4
எப்போதும் அழியாத ஒரு கோலத்தை அவர்கள் அடைவார்கள் என்று இப்பாடல் அறிவிக்கிறது.
this verse declares that they attain a form that never fades.
திருமந்திரம் பாடல் #1099





