திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1098

நான்காம் தந்திரம்6. வயிரவி மந்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சாற்றிய வேதஞ் சராசர மைம்பூதம்நாற்றிசை முக்கண்ணி நாடு மிருள்வெளிதோற்று முயிர்ப்பன்மை சோதி பராபரைஆற்றலொ டாய்நிற்கு மாதி முதல்வியே.

உரை

பாடல் #1097 இல் உள்ளபடி சாதகர்கள் சமர்ப்பணம் செய்த சிதாகாய மந்திரம், வேதமாகவும், அசைவனவும் அசையாதனவுமான அனைத்துப் பொருள்களாகவும், ஐம்பூதங்களாகவும், நான்கு திசைகளிலும் தேடிப்பார்க்கும் மூன்று கண்களை உடைய இறைவியாகவும், இருண்ட அண்டமாகவும், ஒளி பொருந்திய பரவெளியாகவும், பலவிதமான உடல்களில் பிறவி எடுத்து வரும் உயிர்களாகவும், சோதி வடிவமாகவும், அசையும் சக்தியான பராசக்தியாகவும், அனைத்தையும் உருவாக்கும் ஆற்றலுடன் அனைத்துமாகவும் இருக்கும் ஆதி முதல்வியாகவும் இருக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1097 இல் உள்ளபடி சாதகர்கள் சமர்ப்பணம் செய்த சிதாகாய மந்திரம், வேதமாகவும், அசைவனவும் அசையாதனவுமான அனைத்துப் பொருள்களாகவும், ஐம்பூதங்களாகவும் இருக்கிறது.

  • வரி 2

    நான்கு திசைகளிலும் தேடிப்பார்க்கும் மூன்று கண்களை உடைய இறைவியாகவும், இருண்ட அண்டமாகவும், ஒளி பொருந்திய பரவெளியாகவும் இருக்கிறது.

  • வரி 3

    பலவிதமான உடல்களில் பிறவி எடுத்து வரும் உயிர்களாகவும், சோதி வடிவமாகவும், அசையும் சக்தியான பராசக்தியாகவும் இருக்கிறது.

  • வரி 4

    அனைத்தையும் உருவாக்கும் ஆற்றலுடன் அனைத்துமாகவும் இருக்கும் ஆதி முதல்வியாகவும் இருக்கிறது.

திருமந்திரம் பாடல் #1098

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout