தொடர்ந்து படிக்கread this section continuously
நின்ற வயிரவி நீலி நிசாசரிஒன்று மிரண்டு மொருங்கிய வுள்ளத்துச்சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கேநன்றருள் ஞாலத்து நாடிடுஞ் சாற்றியே.
உரைmeaning
பாடல் #1096 இல் உள்ளபடி பிரகாசமாகச் சாதகரின் உடலுக்குள் வந்து வீற்றிருக்கும் வயிரவியானவள், நீலி நிசாசரி எனும் பெயர்களுடன், நீல நிறத் திருமேனியுடன், அடியவர்களின் உள்ளத்தில் உள்ள இருளுக்குள் இருளாகவே வீற்றிருக்கிறாள். எவருடைய மனமும் வாக்கும் உடலும் ஒன்றாக இருக்கிறதோ, அவருடைய உள்ளத்திற்குள் இறைவனுடன் இறைவியும் சேர்ந்து புகுந்து, அங்கேயே வீற்றிருந்து அருள் புரிகிறாள். அவளுடைய நன்மை தரும் அருளை அடைய விரும்பும் உயர்ந்தோர், அவளைத் தேடி அடைந்து, வயிரவி மந்திரத்தின் செபத்தை அவளுக்குச் சமர்ப்பணம் செய்வார்கள்.
As in verse 1096, Vairavi, who now dwells brightly within the seeker's body, bears the names Neeli and Nisachari, and in her blue-hued sacred form dwells, in a simile the source itself adds, as darkness within the darkness that is in devotees' hearts. Whoever's mind, speech and body are made one, into that person's heart the Lord and the Goddess enter together and dwell there, granting grace. The exalted ones who desire her beneficent grace seek her out, reach her, and offer her the recitation of the Vairavi mantra.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1096 இல் உள்ளபடி பிரகாசமாகச் சாதகரின் உடலுக்குள் வந்து வீற்றிருக்கும் வயிரவியானவள், நீலி நிசாசரி எனும் பெயர்களுடன் இருக்கிறாள்.
As in verse 1096, Vairavi, who now dwells brightly within the seeker's body, bears the names Neeli and Nisachari.
- வரி 2Line 2
எவருடைய மனமும் வாக்கும் உடலும் ஒன்றாக இருக்கிறதோ, அவருடைய உள்ளத்திற்குள் இறைவனுடன் இறைவியும் சேர்ந்து புகுந்து, அங்கேயே வீற்றிருந்து அருள் புரிகிறாள்.
Whoever's mind, speech and body are made one, into that person's heart the Lord and the Goddess enter together and dwell there, granting grace.
- வரி 3Line 3
அவளுடைய நன்மை தரும் அருளை அடைய விரும்பும் உயர்ந்தோர்,
The exalted ones who desire her beneficent grace,
- வரி 4Line 4
அவளைத் தேடி அடைந்து, வயிரவி மந்திரத்தின் செபத்தை அவளுக்குச் சமர்ப்பணம் செய்வார்கள்.
seek her out, reach her, and offer her the recitation of the Vairavi mantra.
திருமந்திரம் பாடல் #1097





