திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1096

நான்காம் தந்திரம்6. வயிரவி மந்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கூவிய சீவன் பிராணன் முதலாகப்பாவிய சவ்வுடன் பண்ணு மகாரத்தைமேவிய மாயை விரிசங்கு முத்திரைதேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே.

உரை

பாடல் #1095 இல் உள்ளபடி உரக்கச் செபித்த சாதகர், தம் மூச்சுக்காற்றுடன் சேர்ந்து 'சம்' எனும் மந்திரத்தைச் சங்கு முத்திரையுடன் சமர்ப்பணம் செய்தால், வயிரவியானவள் பிரகாசமாகச் சாதகரின் உடலுக்குள் வந்து வீற்றிருப்பாள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1095 இல் உள்ளபடி உரக்கச் செபித்த சாதகர்,

  • வரி 2

    தம் மூச்சுக்காற்றுடன் சேர்ந்து 'சம்' எனும் மந்திரத்தை,

  • வரி 3

    சங்கு முத்திரையுடன் சமர்ப்பணம் செய்தால்,

  • வரி 4

    வயிரவியானவள் பிரகாசமாகச் சாதகரின் உடலுக்குள் வந்து வீற்றிருப்பாள்.

திருமந்திரம் பாடல் #1096

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout