தொடர்ந்து படிக்கread this section continuously
இருளது சத்தி வெளியதெம் மண்ணல்பொருளது புண்ணியர் போகத்து ளின்பந்தெருளுறு சிந்தையைத் தெய்வமென் றெண்ணில்அருளது செய்யுமெம் மாதிப் பிரானே.
உரைmeaning
உயிர்களுக்குள் ஒளியை மறைக்கின்ற இருள் தன்மையாக ஆதி சக்தியான இறைவியும், இருளை அகற்றுகின்ற வெளிச்ச தன்மையாக எமது தலைவனாகிய இறைவனும் இருக்கிறார்கள். இந்த உண்மையை அறிந்து உணர்ந்தவர்கள் புண்ணியம் செய்தவர்களாக இந்தப் பிறவியிலேயே பேரின்பத்தைப் பெறுகின்றார்கள். இந்த உண்மையை அறிந்து தெளிவு பெற்ற ஞானமே இறைவனை அடையும் வழியைக் காட்டும் என்று நம்பி முழுமையாகச் சரணடைந்தால், ஆதியாகிய இறைவன் அவர்களுக்குள் வெளிப்பட்டு அருள் புரிவான்.
The primal power that is the Goddess exists within all lives as the darkness that conceals light, and our Lord exists as the brightness that dispels darkness. Those who know and realize this truth obtain, as ones who have earned merit, supreme bliss even in this very birth. And if one believes that the wisdom which gains clarity by knowing this truth alone shows the way to attain the Lord, and surrenders completely, the primal Lord will reveal himself within them and grant his grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உயிர்களுக்குள் ஒளியை மறைக்கின்ற இருள் தன்மையாக ஆதி சக்தியான இறைவியும், இருளை அகற்றுகின்ற வெளிச்ச தன்மையாக எமது தலைவனாகிய இறைவனும் இருக்கிறார்கள்.
The primal power that is the Goddess exists within all lives as the darkness that conceals light, and our Lord exists as the brightness that dispels darkness.
- வரி 2Line 2
இந்த உண்மையை அறிந்து உணர்ந்தவர்கள் புண்ணியம் செய்தவர்களாக இந்தப் பிறவியிலேயே பேரின்பத்தைப் பெறுகின்றார்கள்.
Those who know and realize this truth obtain, as ones who have earned merit, supreme bliss even in this very birth.
- வரி 3Line 3
இந்த உண்மையை அறிந்து தெளிவு பெற்ற ஞானமே இறைவனை அடையும் வழியைக் காட்டும் என்று நம்பி முழுமையாகச் சரணடைந்தால்,
And if one believes that the wisdom which gains clarity by knowing this truth alone shows the way to attain the Lord, and surrenders completely,
- வரி 4Line 4
ஆதியாகிய இறைவன் அவர்களுக்குள் வெளிப்பட்டு அருள் புரிவான்.
the primal Lord will reveal himself within them and grant his grace.
திருமந்திரம் பாடல் #1119





