திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1118

நான்காம் தந்திரம்6. வயிரவி மந்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கன்னியுங் கன்னி யழிந்திலன் காதலிதுன்னியங் கைவரைப் பெற்றனள் தூய்மொழிபன்னிய நன்னூற் பகவனு மங்குளஎன்னேயிம் மாயை யிருளது தானே.

உரை

பாடல் #1117 இல் உள்ளபடி ஒளியாகிய இறைவனை இறைவியின் இருள் தன்மை மறைத்து வைத்திருக்கின்றது. என்றும் கன்னியாகவே இருக்கும் இறைவியானவள், என்றும் அழியாத இறைவனுடன் கொண்ட அன்பினால், அவனது ஆசைப்படியே தனது எண்ணத்தாலேயே பல தெய்வங்களை உருவாக்கி அருளினாள். இறைவன் சொல்லியபடியே எழுதப்பட்ட தூய்மையான வேதங்கள் கூறுகின்ற ஒளி வடிவமான இறைவனும், இருள் தன்மை கொண்ட இறைவியோடு சேர்ந்து உயிர்களுக்குள் வீற்றிருக்கின்றான். ஆனாலும், மேஜை மேல் வைக்கப்பட்ட விளக்கின் அடியிலேயே இருள் இருப்பதைப் போல, உயிர்களின் தலை உச்சியில் ஒளியாக இருக்கும் அவனையே மறைக்கின்ற இருளாக இறைவியின் மாயை இருக்கின்றது. இந்த மாயையின் சக்திதான் எவ்வளவு பெரியது?

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1117 இல் உள்ளபடி ஒளியாகிய இறைவனை இறைவியின் இருள் தன்மை மறைத்து வைத்திருக்கின்றது.

  • வரி 2

    என்றும் கன்னியாகவே இருக்கும் இறைவியானவள், என்றும் அழியாத இறைவனுடன் கொண்ட அன்பினால், அவனது ஆசைப்படியே தனது எண்ணத்தாலேயே பல தெய்வங்களை உருவாக்கி அருளினாள்.

  • வரி 3

    இறைவன் சொல்லியபடியே எழுதப்பட்ட தூய்மையான வேதங்கள் கூறுகின்ற ஒளி வடிவமான இறைவனும், இருள் தன்மை கொண்ட இறைவியோடு சேர்ந்து உயிர்களுக்குள் வீற்றிருக்கின்றான்.

  • வரி 4

    ஆனாலும், மேஜை மேல் வைக்கப்பட்ட விளக்கின் அடியிலேயே இருள் இருப்பதைப் போல, உயிர்களின் தலை உச்சியில் ஒளியாக இருக்கும் அவனையே மறைக்கின்ற இருளாக இறைவியின் மாயை இருக்கின்றது. இந்த மாயையின் சக்திதான் எவ்வளவு பெரியது?

திருமந்திரம் பாடல் #1118

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout