தொடர்ந்து படிக்கread this section continuously
ஆதி யனாதியு மாய பராசக்திபாதி பராபரை மேலுறை பைந்தொடிமாது சமாதி மனோன்மணி மங்கலிஓதுமென் னுள்ளத்து உடன்முகிழ்த் தாளே.
உரைmeaning
அனைத்திற்கும் முதலாகவும் அனைத்துமாகவும், உலக இயக்கத்திற்குக் காரணமாகவும் இருக்கும் பராசக்தியாகிய வயிரவி தேவி, அசையா சக்தியான சதாசிவமூர்த்தியுடன் சரிபாதியான அசையும் சக்தியாகவும், அனைத்திற்கும் மேலானவளாகவும் இருந்து, அனைத்தையும் பொன் வளையல் போல வளைத்திருக்கின்றாள். அனைத்திற்குள்ளும் உறைந்திருப்பவளும், அழகான மங்கையாகவும் அமைதியாகவும் இறைவனோடு சேர்ந்து உயிர்களின் மனதை இயக்குபவளாகவும், நன்மையின் வடிவமாகவும் இருக்கின்றவளும் ஆவாள். அவளை எப்போதும் போற்றி வணங்கும் எமது உள்ளத்திற்குள்ளிருந்து வெளிப்பட்டு அருளினாள்.
Goddess Vairavi, the supreme power, who is the beginning of everything and everything itself, and who is the cause of the world's workings, is the moving power that stands as the exact half of the unmoving power that is Lord Sadasiva, is above all things, and encircles everything like a golden bangle. She also dwells within all things, is a beautiful and serene maiden, moves the minds of all lives joined with the Lord, and is the very form of good. And she revealed herself, of her grace, from within our heart, which always praises and worships her.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அனைத்திற்கும் முதலாகவும் அனைத்துமாகவும், உலக இயக்கத்திற்குக் காரணமாகவும் இருக்கும் பராசக்தியாகிய வயிரவி தேவி,
Goddess Vairavi, the supreme power, who is the beginning of everything and everything itself, and who is the cause of the world''s workings,
- வரி 2Line 2
அசையா சக்தியான சதாசிவமூர்த்தியுடன் சரிபாதியான அசையும் சக்தியாகவும், அனைத்திற்கும் மேலானவளாகவும் இருந்து, அனைத்தையும் பொன் வளையல் போல வளைத்திருக்கின்றாள்.
is the moving power that stands as the exact half of the unmoving power that is Lord Sadasiva, is above all things, and encircles everything like a golden bangle.
- வரி 3Line 3
அனைத்திற்குள்ளும் உறைந்திருப்பவளும், அழகான மங்கையாகவும் அமைதியாகவும் இறைவனோடு சேர்ந்து உயிர்களின் மனதை இயக்குபவளாகவும், நன்மையின் வடிவமாகவும் இருக்கின்றவளும் ஆவாள்.
She also dwells within all things, is a beautiful and serene maiden, moves the minds of all lives joined with the Lord, and is the very form of good.
- வரி 4Line 4
அவளை எப்போதும் போற்றி வணங்கும் எமது உள்ளத்திற்குள்ளிருந்து வெளிப்பட்டு அருளினாள்.
And she revealed herself, of her grace, from within our heart, which always praises and worships her.
திருமந்திரம் பாடல் #1120





