தொடர்ந்து படிக்கread this section continuously
ஓதிய வண்ணங் கலையி னுயர்கலைஆதியில் வேதமே யாமென் றறிகிலர்சாதியும் பேதமுந் தத்துவ மாய்நிற்பள்ஆதியென் றோதின ளாவின் கிழத்தியே.
உரைmeaning
இறைவனை அடைவதற்கு உலகத்தோர் கற்றுக்கொள்கின்ற அனைத்துக் கல்விகளுக்கும் மேலான கல்வியாக, ஆதியிலிருந்தே இருக்கின்ற வேதங்களாக இறைவியே இருப்பதை யாரும் அறியாமல் இருக்கின்றனர். சாதி என்றும் பேதம் என்றும் பலவிதமாகப் பிரிந்திருக்கும் அனைத்திற்கும் தத்துவமாகவும் அவளே இருக்கின்றாள் என்பதையும், அவளே அனைத்திற்கும் முதல்வியானவள் என்பதையும், ஆன்மாக்களின் தலைவியாகிய இறைவியே எமக்கு ஓதி அருளினாள்.
None know that the Goddess herself, existing from the very beginning as the Vedas, is the learning that stands above all the learning that people of this world acquire to attain the Lord. The Goddess, who is the chief of souls, herself taught us and graciously declared that she is the very principle underlying everything that lies divided in many ways as caste and as other distinctions, and that she herself is the foremost of all.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனை அடைவதற்கு உலகத்தோர் கற்றுக்கொள்கின்ற அனைத்துக் கல்விகளுக்கும் மேலான கல்வியாக, ஆதியிலிருந்தே இருக்கின்ற வேதங்களாக இறைவியே இருப்பதை யாரும் அறியாமல் இருக்கின்றனர்.
None know that the Goddess herself, existing from the very beginning as the Vedas, is the learning that stands above all the learning that people of this world acquire to attain the Lord.
- வரி 2Line 2
சாதி என்றும் பேதம் என்றும் பலவிதமாகப் பிரிந்திருக்கும் அனைத்திற்கும் தத்துவமாகவும் அவளே இருக்கின்றாள்.
She herself is the very principle underlying everything that lies divided in many ways as caste and as other distinctions.
- வரி 3Line 3
அவளே அனைத்திற்கும் முதல்வியானவள் என்பதையும்,
And that she herself is the foremost of all,
- வரி 4Line 4
ஆன்மாக்களின் தலைவியாகிய இறைவியே எமக்கு ஓதி அருளினாள்.
this the Goddess, who is the chief of souls, herself taught us and graciously declared.
திருமந்திரம் பாடல் #1121





