தொடர்ந்து படிக்கread this section continuously
ஆவின் கிழத்திநல் லாவடு தண்டுறைநாவின் கிழத்தி நலம்புகழ்ந் தேத்திடுந்தேவின் கிழத்தி திருவாஞ் சிவமங்கைமேவுங் கிழத்தி வினைகடிந் தாளே.
உரைmeaning
ஆன்மாக்களின் தலைவியானவளும், எல்லாவித நன்மைகளையும் அருளுகின்ற திரு ஆவடு திருத்தலத்தில் வீற்றிருக்கின்றவளும், உயிர்களின் சொல்லிற்குத் தலைவியானவளும், தன்னுடைய நன்மைகளைப் புகழ்ந்து போற்றிப் பாடி வணங்குகின்றவர்களுக்குச் செல்வத்திற்கெல்லாம் மேலான செல்வமாகிய முக்தியை அருளுகின்றவளும், சதாசிவமூர்த்தியின் சரிபாதியாக இருக்கும் துணைவியானவளும், அனைத்திலும் பரவி இருக்கின்ற அனைத்திற்கும் தலைவியானவளும் ஆகிய வயிரவி தேவியானவள், தம்மை முழுவதுமாகச் சரணடைகின்ற உயிர்களின் வினைகளை எல்லாம் தடுத்து ஆட்கொண்டு அருளினாள்.
Goddess Vairavi, who is the chief of souls, who dwells at the sacred site of Thiru Aavadu, granting every kind of good, who is the chief over the speech of all lives, who grants liberation, the wealth greater than all other wealth, to those who praise, glorify, sing and worship her good qualities, who is the consort standing as the exact half of Lord Sadasiva, and who, pervading everything, is the chief of everything, held back and took into her care all the karma of the lives that surrender to her completely, of her grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஆன்மாக்களின் தலைவியானவளும், எல்லாவித நன்மைகளையும் அருளுகின்ற திரு ஆவடு திருத்தலத்தில் வீற்றிருக்கின்றவளும் ஆகிய வயிரவி தேவி,
Goddess Vairavi, who is the chief of souls, and who dwells at the sacred site of Thiru Aavadu, granting every kind of good,
- வரி 2Line 2
உயிர்களின் சொல்லிற்குத் தலைவியானவளும், தன்னுடைய நன்மைகளைப் புகழ்ந்து போற்றிப் பாடி வணங்குகின்றவர்களுக்குச் செல்வத்திற்கெல்லாம் மேலான செல்வமாகிய முக்தியை அருளுகின்றவளும்,
is the chief over the speech of all lives, and grants liberation, the wealth greater than all other wealth, to those who praise, glorify, sing and worship her good qualities,
- வரி 3Line 3
சதாசிவமூர்த்தியின் சரிபாதியாக இருக்கும் துணைவியானவளும், அனைத்திலும் பரவி இருக்கின்ற அனைத்திற்கும் தலைவியானவளும் ஆவாள்.
is the consort standing as the exact half of Lord Sadasiva, and, pervading everything, is the chief of everything.
- வரி 4Line 4
தம்மை முழுவதுமாகச் சரணடைகின்ற உயிர்களின் வினைகளை எல்லாம் தடுத்து ஆட்கொண்டு அருளினாள்.
She held back and took into her care all the karma of the lives that surrender to her completely, of her grace.
திருமந்திரம் பாடல் #1122





