திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1090

நான்காம் தந்திரம்6. வயிரவி மந்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

உரைத்த நவசத்தி யொன்று முடியநிரைத்த விராசி நெறிமுறை எண்ணிப்பிரைச்சத மெட்டுமுன் பேசிய நந்திநிரைத்து நியதி நியமஞ்செய் தானே.

உரை

பாடல் #1089 இல் உள்ளபடி இறைவன் அருளிய ஒன்பது சக்திகளை வழிபடும் முறையை இப்பாடலில் அறியலாம். வயிரவியின் ஒன்பது சக்திகளில் முதன்மையாக இருக்கும் மனோன்மணியைச் சுற்றி, வயிரவி செய்யும் பன்னிரு கலைகளைப் (பாடல் #1075 இல் உள்ளபடி) பொருள்செய்து தியானித்து, வயிரவியின் திருக்கோலத்தைத் தமக்குள் தரிசிக்கும் முன்பே, அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை, குருவாக நின்று இறைவனே கொடுத்தருளினார்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1089 இல் உள்ளபடி இறைவன் அருளிய ஒன்பது சக்திகளை வழிபடும் முறையை இப்பாடலில் அறியலாம்.

  • வரி 2

    வயிரவியின் ஒன்பது சக்திகளில் முதன்மையாக இருக்கும் மனோன்மணியைச் சுற்றி, வயிரவி செய்யும் பன்னிரு கலைகளைப் (பாடல் #1075 இல் உள்ளபடி) பொருள்செய்து தியானிக்க வேண்டும்.

  • வரி 3

    வயிரவியின் திருக்கோலத்தைத் தமக்குள் தரிசிக்கும் முன்பே, அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை.

  • வரி 4

    குருவாக நின்று இறைவனே கொடுத்தருளினார்.

திருமந்திரம் பாடல் #1090

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout