திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1091

நான்காம் தந்திரம்6. வயிரவி மந்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தாமக் குழலி தயைக்கண்ணி யுண்ணின்றவேமத் திருளற வீசு மிளங்கொடியோமப் பெருஞ்சுட ருள்ளெழு நுண்புகைமேவித்து அமுதொடு மீண்டது காணே.

உரை

பாடல் #1090 இல் உள்ளபடி குருவாகிய இறைவன் அருளிய முறையில் சாதகம் செய்தால், நறுமணம் வீசும் மலர்களைச் சூடிய கூந்தலுடன், கருணை பொழியும் கண்களை உடைய வயிரவியானவள், சாதகர்களின் உள்ளத்திற்குள் வீற்றிருந்து, அவர்களின் ஆணவ மலத்தைச் சிறுகச் சிறுக நீக்கி அருளுவாள். அவளால் நீக்கப்பட்டு, ஆன்மா ஆணவத்திலிருந்து முழுவதும் மீண்டு தூய்மையானதாகத் திரும்பி வருவதைக் காணுங்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1090 இல் உள்ளபடி குருவாகிய இறைவன் அருளிய முறையில் சாதகம் செய்தால், நறுமணம் வீசும் மலர்களைச் சூடிய கூந்தலுடன், கருணை பொழியும் கண்களை உடைய வயிரவியானவள் வருவாள்.

  • வரி 2

    இருள் அகற்றும் இளங்கொடி போல, சாதகர்களின் உள்ளத்திற்குள் வீற்றிருந்து,

  • வரி 3

    அவர்களின் ஆணவ மலத்தைச் சிறுகச் சிறுக நீக்கி அருளுவாள்.

  • வரி 4

    அவளால் நீக்கப்பட்டு, ஆன்மா ஆணவத்திலிருந்து முழுவதும் மீண்டு தூய்மையானதாகத் திரும்பி வருவதைக் காணுங்கள்.

திருமந்திரம் பாடல் #1091

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout