தொடர்ந்து படிக்கread this section continuously
ஆகின்ற மூவரு மங்கே யடங்குவர்போகின்ற பூதம் பொருந்து புராதரர்சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்போகுந் திரிபுரை புண்ணியத் தோருக்கே.
உரைmeaning
பாடல் #1076 இல் உள்ளபடி ஆதியும் அந்தமுமாகி நிற்கின்ற வயிரவி மந்திரத்தில் பிரம்மன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூன்று தேவர்களும் அடங்கியிருக்கின்றனர். முக்தி என்னும் பெரும்பயன் பெறுவதற்கு, மூன்று தேவர்களும் அடங்கியிருக்கும் இந்த வயிரவி மந்திரத்தைப் பஞ்சபூதங்களால் ஆன அழியக்கூடிய உலகத்தைச் சார்ந்திருக்கும் வாழ்க்கை முறையை விரும்பாமல் சாதகம் செய்கின்ற சாதகர்களாகவும், அவர்கள் செய்கின்ற சாதகமாகவும், செய்யப்படுகின்ற நோக்கமாகவும் தானே இருந்து வயிரவி புண்ணியத்தை அருளுகின்றாள்.
As in verse 1076, within the Vairavi mantra that stands as both origin and end, the three gods Brahma, Vishnu and Rudra are contained. So that seekers may attain the great fruit that is liberation, Vairavi, in whose mantra the three gods are thus contained, herself becomes the seekers who pursue their practice without desiring the way of life bound to this perishable world made of the five elements, becomes the very practice they perform, and becomes the goal for which it is performed, and so grants them merit.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஆகின்ற மூவராகிய பிரம்மன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூன்று தேவர்களும் அந்த மந்திரத்திற்குள் அடங்கியிருக்கின்றனர்.
The three gods who come to be, Brahma, Vishnu and Rudra, are contained there within the mantra.
- வரி 2Line 2
பஞ்சபூதங்களால் ஆன அழியக்கூடிய உலகத்தைச் சார்ந்திருக்கும் வாழ்க்கை முறையை விரும்பாத சாதகர்கள்,
Seekers who do not desire the way of life bound to this perishable world made of the five elements
- வரி 3Line 3
முக்தி என்னும் பெரும்பயனை அடைவதற்காகச் சாதகம் செய்கின்றார்கள்.
pursue their practice so as to attain the great fruit that is liberation,
- வரி 4Line 4
அவர்களுக்கு வயிரவி தானே சாதகராகவும், சாதகமாகவும், சாதகத்தின் நோக்கமாகவும் இருந்து புண்ணியத்தை அருளுகின்றாள்.
and Vairavi herself becomes the seeker, the practice and the goal, granting them merit.
திருமந்திரம் பாடல் #1077





