தொடர்ந்து படிக்கread this section continuously
பூசனை கெந்தம் புனைமலர் மாகோடியோசனை பஞ்சத் தொலிவந் துரைசெய்யும்வாச மிலாத மணிமந் திரயோகந்தேசந் திகழுந் திரிபுரை காணே.
உரைmeaning
பாடல் #1085 இல் உள்ளபடி யோகியர்களின் உள்ளத்திற்குள் வீற்றிருக்கும் பராசக்தியை மனத்தளவில் பூஜிக்கும் முறையை இப்பாடலில் அறியலாம். அப்படி மானசீகமாக யோகம் செய்து வழிபடுபவர்கள், உலகங்கள் அனைத்திலும் நிறைந்திருக்கும் திரிபுரையைத் தரிசிக்கலாம்.
As in verse 1085, this verse teaches the manner of worshiping, at the level of the mind, the Parasakthi who dwells within the yogis' hearts. Those who thus perform yoga and worship mentally may come to behold Thiripurai, who pervades all the worlds.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1085 இல் உள்ளபடி யோகியர்களின் உள்ளத்திற்குள் வீற்றிருக்கும் பராசக்தியை மனத்தளவில் பூஜிக்கும் முறையை இப்பாடலில் அறியலாம்.
As in verse 1085, this verse teaches the manner of worshiping, at the level of the mind, the Parasakthi who dwells within the yogis' hearts.
- வரி 2Line 2
மனத்தளவிலேயே நறுமணப் பொருள்களால் அபிஷேகம் செய்தும், மலர்களால் அலங்கரித்தும் அவளை வழிபடலாம்.
One may worship her by mentally anointing her with fragrant substances and adorning her with flowers.
- வரி 3Line 3
தம் மூச்சுக்காற்றையும் இதயத் துடிப்பையும் இசைக் கருவிகளாகக் கொண்டு, மனத்திற்குள்ளேயே மந்திரங்களை உச்சரிக்காமல் செபிக்கலாம்.
One may take one's own breath and heartbeat as musical instruments, and recite the mantras within the mind, without vocalizing them.
- வரி 4Line 4
அப்படி மானசீகமாக யோகம் செய்து வழிபடுபவர்கள், உலகங்கள் அனைத்திலும் நிறைந்திருக்கும் திரிபுரையைத் தரிசிக்கலாம்.
Those who thus perform yoga and worship mentally may come to behold Thiripurai, who pervades all the worlds.
திருமந்திரம் பாடல் #1086





