தொடர்ந்து படிக்கread this section continuously
கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்எண்டிசை யோகி இறைவி பராசக்திஅண்டமோ டெண்டிசை தாங்கு மருட்செல்விபுண்டரி கத்தினுள்ளும் பூசனை யாளே.
உரைmeaning
பாடல் #1084 இல் உள்ளபடி சாதகர்கள் தரிசித்த வயிரவி, தன் நான்கு கைகளில் சிலம்பு, வளையல், சங்கு, சக்கரம் ஆகியவற்றை ஏந்தியிருக்கிறாள். அவள் இருக்கும் எட்டுத் திசைகளிலும் யோகம் செய்த யோகியர்களுக்கு, இறைவியான பராசக்தியின் உருவமாக, அண்டசராசரங்களையும் அவற்றின் எட்டுத் திசைகளையும் தாங்கும் அருள் வடிவமாக, அவர்களின் நெஞ்சத் தாமரைக்குள் வீற்றிருந்து, அவர்களின் பூஜையை ஏற்றுக்கொள்பவளாக இருக்கிறாள்.
As in verse 1084, Vairavi, whom the seekers behold, holds in her four hands an anklet, a bangle, a conch, and a discus. To the yogis who perform yoga in the eight directions where she dwells, she is the form of Parasakthi, the goddess, bearing the whole universe and its eight directions, dwelling as a form of grace within the lotus of their hearts, and it is she who accepts their worship.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1084 இல் உள்ளபடி சாதகர்கள் தரிசித்த வயிரவி, தன் நான்கு கைகளில் சிலம்பு, வளையல், சங்கு, சக்கரம் ஆகியவற்றை ஏந்தியிருக்கிறாள்.
As in verse 1084, Vairavi, whom the seekers behold, holds in her four hands an anklet, a bangle, a conch, and a discus.
- வரி 2Line 2
அவள் இருக்கும் எட்டுத் திசைகளிலும் யோகம் செய்த யோகியர்களுக்கு, இறைவியான பராசக்தியின் உருவமாக இருக்கிறாள்.
To the yogis who perform yoga in the eight directions where she dwells, she is the form of Parasakthi, the goddess.
- வரி 3Line 3
அண்டசராசரங்களையும் அவற்றின் எட்டுத் திசைகளையும் தாங்கும் அருள் வடிவமாக, அவர்களின் நெஞ்சத் தாமரைக்குள் வீற்றிருக்கிறாள்.
She bears the whole universe and its eight directions, dwelling as a form of grace within the lotus of their hearts.
- வரி 4Line 4
அவர்களின் பூஜையை ஏற்றுக்கொள்பவளாக இருக்கிறாள்.
It is she who accepts their worship.
திருமந்திரம் பாடல் #1085





