தொடர்ந்து படிக்கread this section continuously
பூரித்த பூவித ழெட்டினுக் குள்ளேயோர்ஆரியத் தாளுண்டங் கோரெண்மர் கன்னியர்பாரித்த பெண்க ளறுபத்து நால்வருஞ்சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே.
உரைmeaning
பாடல் #1083 இல் உள்ளபடி பேரானந்தத்தில் பூரித்திருக்கும் வயிரவியின் பூப்போன்ற இதழ்களிலிருந்து எட்டு வகைக் கன்னியர் தோன்றி, எட்டுத் திசைகளுக்கும் ஒவ்வொருவராக நிற்கிறார்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் எட்டு வகைக் கலைகள் தோன்றி, அந்தந்தக் கலைகளுக்கான தேவியராக, மொத்தம் அறுபத்து நான்கு கலைகளுக்கு அறுபத்து நான்கு தேவியராக இருக்கிறார்கள். வயிரவி மந்திரத்தைச் சாதகம் செய்யும் சாதகர்கள், வயிரவியின் அம்சமான அந்த அறுபத்து நான்கு தேவியரின் தரிசனத்தைக் காண்பார்கள்.
As in verse 1083, from the flower-like lips of Vairavi, who is in great bliss, eight kinds of maidens appear, one standing for each of the eight directions. From each of them eight arts arise, and become goddesses for those arts, sixty-four goddesses in all for the sixty-four arts. Seekers who practice the Vairavi mantra come to behold the vision of these sixty-four goddesses, who are aspects of Vairavi herself.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1083 இல் உள்ளபடி பேரானந்தத்தில் பூரித்திருக்கும் வயிரவியின் பூப்போன்ற இதழ்களிலிருந்து எட்டு வகைக் கன்னியர் தோன்றுகிறார்கள்.
As in verse 1083, from the flower-like lips of Vairavi, who is in great bliss, eight kinds of maidens appear.
- வரி 2Line 2
அவர்கள் எட்டுத் திசைகளுக்கும் ஒவ்வொருவராக நிற்கிறார்கள்.
They stand, one for each of the eight directions.
- வரி 3Line 3
ஒவ்வொருவரிடமிருந்தும் எட்டு வகைக் கலைகள் தோன்றி, அந்தந்தக் கலைகளுக்கான தேவியராக, மொத்தம் அறுபத்து நான்கு கலைகளுக்கு அறுபத்து நான்கு தேவியராக இருக்கிறார்கள்.
From each of them eight arts arise, and become goddesses for those arts, sixty-four goddesses in all for the sixty-four arts.
- வரி 4Line 4
வயிரவி மந்திரத்தைச் சாதகம் செய்யும் சாதகர்கள், வயிரவியின் அம்சமான அந்த அறுபத்து நான்கு தேவியரின் தரிசனத்தைக் காண்பார்கள்.
Seekers who practice the Vairavi mantra come to behold the vision of these sixty-four goddesses, who are aspects of Vairavi herself.
திருமந்திரம் பாடல் #1084





