திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1083

நான்காம் தந்திரம்6. வயிரவி மந்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பன்மணி சந்திர கோடி திருமுடிசொன்மணி குண்டலக் காதி யுழைக்கண்ணிநன்மணி சூரிய சோம நயனத்தாள்பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.

உரை

பாடல் #1082 இல் உள்ளபடி பலவிதமான நவரத்தினங்களைச் சூடியிருக்கும் வயிரவியின் திருமுடி கோடி சந்திரனைப் போலப் பிரகாசிக்கிறது. அவளுடைய காதுகளில் மணியோசை எழுப்பும் அழகிய குண்டலங்கள் உள்ளன. அவளுடைய கண்கள் அழகிய மானின் கண்களைப் போல் இருக்கின்றன. சிறந்த மணிகளைப் போலப் பிரகாசிக்கும் சூரியனையும் சந்திரனையும் தன் இரு கண்களாகக் கொண்டிருக்கிறாள். அவளுடைய திருமுகம் நெருப்பில் உருகும் பொன்னைப் போல ஜொலித்து, பேரானந்தத்தில் இருக்கிறாள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1082 இல் உள்ளபடி பலவிதமான நவரத்தினங்களைச் சூடியிருக்கும் வயிரவியின் திருமுடி கோடி சந்திரனைப் போலப் பிரகாசிக்கிறது.

  • வரி 2

    அவளுடைய காதுகளில் மணியோசை எழுப்பும் அழகிய குண்டலங்கள் உள்ளன; அவளுடைய கண்கள் அழகிய மானின் கண்களைப் போல் இருக்கின்றன.

  • வரி 3

    சிறந்த மணிகளைப் போலப் பிரகாசிக்கும் சூரியனையும் சந்திரனையும் தன் இரு கண்களாகக் கொண்டிருக்கிறாள்.

  • வரி 4

    அவளுடைய திருமுகம் நெருப்பில் உருகும் பொன்னைப் போல ஜொலித்து, பேரானந்தத்தில் இருக்கிறாள்.

திருமந்திரம் பாடல் #1083

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout