தொடர்ந்து படிக்கread this section continuously
மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானிசொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழைகல்லிய லொப்பது காணுந் திருமேனிபல்லிய லாடையும் பன்மணி தானே.
உரைmeaning
பாடல் #1081 இல் உள்ளபடி அனைத்திற்கும் மேலானவளாக மெல்லிய உருவம் கொண்டு நிற்கும் வயிரவி, மென்மையான கொடி போன்ற இடையையும், விஷம் போன்ற கடினத் தன்மையுடைய உருவத்தையும், கிளிமூக்கு போல சிவந்த இதழ்களையும் கொண்டு, அழகிய அணிகலன்களை அணிந்து, நீலக்கல் போன்ற நீல நிறத் திருமேனியுடன், பலவிதமான ஆடைகளையும் பலவிதமான நவரத்தினங்களையும் சூடிக்கொண்டு நிற்கிறாள்.
As in verse 1081, Vairavi, who stands supreme above all in a delicate form, has a waist soft as a vine, a body hard in nature as poison, lips red as a parrot's beak, and wears beautiful ornaments; her sacred form is blue as a sapphire, and she is decked in many kinds of garments and many kinds of nine gems.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1081 இல் உள்ளபடி அனைத்திற்கும் மேலானவளாக மெல்லிய உருவம் கொண்டு நிற்கும் வயிரவி, மென்மையான கொடி போன்ற இடையையும், விஷம் போன்ற கடினத் தன்மையுடைய உருவத்தையும் கொண்டிருக்கிறாள்.
As in verse 1081, Vairavi, who stands supreme above all in a delicate form, has a waist soft as a vine and a body hard in nature as poison.
- வரி 2Line 2
கிளிமூக்கு போல சிவந்த இதழ்களைக் கொண்டு, அழகிய அணிகலன்களை அணிந்திருக்கிறாள்.
She has lips red as a parrot's beak, and wears beautiful ornaments.
- வரி 3Line 3
நீலக்கல் போன்ற நீல நிறத் திருமேனியைக் கொண்டிருக்கிறாள்.
Her sacred form is blue as a sapphire.
- வரி 4Line 4
பலவிதமான ஆடைகளையும் பலவிதமான நவரத்தினங்களையும் சூடிக்கொண்டு நிற்கிறாள்.
She is decked in many kinds of garments and many kinds of nine gems.
திருமந்திரம் பாடல் #1082





