திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1081

நான்காம் தந்திரம்6. வயிரவி மந்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சூலங் கபாலங்கை யேந்திய சூலிக்குநாலங் கரமுள நாகபா சாங்குசம்மாலங் கயனறி யாத வடிவுக்குமேலங்க மாய்நின்ற மெல்லிய லாளே.

உரை

பாடல் #1080 இல் உள்ளபடி சோதி வடிவில் வந்து ஆட்கொள்கின்ற வயிரவியானவள், சூலி எனும் பெயருடன், தன் நான்கு கரங்களில் முறையே சூலம், கபாலம், நாகபாசாணம், அங்குசம் ஆகியவற்றை ஏந்திய உருவமாக அருளுகிறாள். திருமாலும் பிரம்மனும் அறிய முடியாத அடிமுடி காணொணாத பேருருவமாக, அனைத்திற்கும் மேலானவளாக, மெல்லிய உருவம் கொண்டு நிற்கிறாள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1080 இல் உள்ளபடி சோதி வடிவில் வந்து ஆட்கொள்கின்ற வயிரவியானவள், சூலி எனும் பெயருடன், தன் நான்கு கரங்களில் முறையே சூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தியிருக்கிறாள்.

  • வரி 2

    நாகபாசாணம், அங்குசம் ஆகியவற்றையும் நான்கு கரங்களில் ஏந்திய உருவமாக அருளுகிறாள்.

  • வரி 3

    திருமாலும் பிரம்மனும் அறிய முடியாத அடிமுடி காணொணாத பேருருவமாக இருக்கிறாள்.

  • வரி 4

    அனைத்திற்கும் மேலானவளாக, மெல்லிய உருவம் கொண்டு நிற்கிறாள்.

திருமந்திரம் பாடல் #1081

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout