தொடர்ந்து படிக்கread this section continuously
காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறுபூணும் பலபல பொன்போலத் தோற்றிடும்பேணுஞ் சிவனும் பிரமனும் மாயனுங்காணுந் தலைவிநற் காரணி காணே.
உரைmeaning
பாடல் #1086 இல் உள்ளபடி யோகியர்கள் தரிசித்த திரிபுரை சக்தி, உலகில் காணப்படும் எல்லாவிதமான தெய்வங்களின் உருவமாகவும் இருக்கிறாள். ஒரே தங்கத்திலிருந்து பலவிதமான நகைகள் செய்யப்படுவதைப் போல, ஒரே சக்தியான அவளே அனைத்துத் தெய்வங்களாகவும் இருக்கிறாள். சாதகர்கள் போற்றும் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் செய்யும் அழித்தல், படைத்தல், காத்தல் ஆகிய தொழில்களுக்கும் நன்மை செய்யும் காரணியாக, திரிபுரை சக்தியே இருக்கிறாள் என்பதைக் காணுங்கள்.
As in verse 1086, Thiripurai Shakti, whom the yogis behold, is also the form of every kind of god found in this world. Just as many kinds of ornaments are made from the same gold, so that same one Shakti is all the gods. Behold that Thiripurai Shakti herself is the beneficent cause behind the three deeds of destruction, creation and preservation done by the three deities Shiva, Brahma and Vishnu, whom seekers revere.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1086 இல் உள்ளபடி யோகியர்கள் தரிசித்த திரிபுரை சக்தி, உலகில் காணப்படும் எல்லாவிதமான தெய்வங்களின் உருவமாகவும் இருக்கிறாள்.
As in verse 1086, Thiripurai Shakti, whom the yogis behold, is also the form of every kind of god found in this world.
- வரி 2Line 2
ஒரே தங்கத்திலிருந்து பலவிதமான நகைகள் செய்யப்படுவதைப் போல, ஒரே சக்தியான அவளே அனைத்துத் தெய்வங்களாகவும் இருக்கிறாள்.
Just as many kinds of ornaments are made from the same gold, so that same one Shakti is all the gods.
- வரி 3Line 3
சாதகர்கள் போற்றும் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் அழித்தல், படைத்தல், காத்தல் ஆகிய தொழில்களைச் செய்கிறார்கள்.
The three deities Shiva, Brahma and Vishnu, whom seekers revere, perform the deeds of destruction, creation and preservation.
- வரி 4Line 4
அந்தத் தொழில்களுக்கும் நன்மை செய்யும் காரணியாக, திரிபுரை சக்தியே இருக்கிறாள் என்பதைக் காணுங்கள்.
Behold that Thiripurai Shakti herself is the beneficent cause behind those deeds.
திருமந்திரம் பாடல் #1087





