தொடர்ந்து படிக்கread this section continuously
காரணி மந்திர மோதுங் கமலத்துப்பூரண கும்ப விரேசம் பொருந்தியநாரண நந்தி நடுவங் குரைசெய்தஆரண வேதநா லந்தமும் ஆமே.
உரைmeaning
பாடல் #1087 இல் உள்ளபடி முத்தொழில்களுக்கும் நன்மை செய்யும் காரணியாக இருக்கும் திரிபுரை சக்தி, தாமரை மலர் மேல் அமர்ந்து வேதங்களை ஓதி உயிர்களைப் படைக்கும் தொழிலாகவும், உயிர்கள் அனைத்திற்கும் மூச்சுக்காற்றாக இயங்கிக் காப்பாற்றும் தொழிலாகவும், உலகில் உயிர்கள் செய்யும் அனைத்துச் செயல்களுக்கும் நடுநிலையான சாட்சியாக நின்று அவரவர் செயலுக்கேற்பக் கர்மங்களை அழிக்கும் தொழிலாகவும், அதே நேரம் அந்தத் தொழில்களால் வகுக்கப்படும் வேதத்தின் எல்லையாகவும் இருக்கிறாள்.
As in verse 1087, Thiripurai Shakti, the beneficent cause behind the three deeds, is at once the deed of one seated on the lotus flower who recites the Vedas and creates beings, the deed of one who functions as the breath of all beings and preserves them, the deed of one who stands as an impartial witness to all that beings do in the world and destroys their karma according to their deeds, and also the very boundary of the Veda that these deeds themselves mark out.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1087 இல் உள்ளபடி முத்தொழில்களுக்கும் நன்மை செய்யும் காரணியாக இருக்கும் திரிபுரை சக்தி, தாமரை மலர் மேல் அமர்ந்து வேதங்களை ஓதி உயிர்களைப் படைக்கும் தொழிலாக இருக்கிறாள்.
As in verse 1087, Thiripurai Shakti, the beneficent cause behind the three deeds, is the deed of one seated on the lotus flower who recites the Vedas and creates beings.
- வரி 2Line 2
உயிர்கள் அனைத்திற்கும் மூச்சுக்காற்றாக இயங்கிக் காப்பாற்றும் தொழிலாகவும் இருக்கிறாள்.
She is also the deed of one who functions as the breath of all beings and preserves them.
- வரி 3Line 3
உலகில் உயிர்கள் செய்யும் அனைத்துச் செயல்களுக்கும் நடுநிலையான சாட்சியாக நின்று, அவரவர் செயலுக்கேற்பக் கர்மங்களை அழிக்கும் தொழிலாகவும் இருக்கிறாள்.
She stands as an impartial witness to all that beings do in the world, and is the deed of destroying their karma according to their deeds.
- வரி 4Line 4
அதே நேரம், அந்தத் தொழில்களால் வகுக்கப்படும் வேதத்தின் எல்லையாகவும் இருக்கிறாள்.
At the same time she is the very boundary of the Veda that these deeds themselves mark out.
திருமந்திரம் பாடல் #1088





