திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1124

நான்காம் தந்திரம்6. வயிரவி மந்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆதி யனாதி யகாரணி காரணிவேதம தாய்ந்தனள் வேதியர்க் காய்நின்றசோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும்பாதி பராபரை பன்னிரண் டாதியே.

உரை

ஆதிப் பரம்பொருளாகிய இறைவி அனைத்திற்கும் ஆரம்பமாகவும் தனக்கென்று ஒரு ஆரம்பம் இல்லாமலும், அனைத்திற்கும் காரணமாகவும் தனக்கென்று ஒரு காரணம் இல்லாமலும் இருக்கின்றாள். இவளே வேதங்களை ஓதி முறைப்படி யாகம் வளர்க்கின்ற வேதியர்களுக்காக, அவர்கள் ஓதுகின்ற வேதங்களின் தன்மையாகவும் பொருளாகவும் வீற்றிருக்கின்றாள். அவர்கள் ஓதுகின்ற முறைகளையும் அவர்களின் எண்ணிய உருவத்தையும் ஆராய்ந்து, அவர்கள் வேண்டிய உருவத்திலேயே யாகத்தில் வந்து வீற்றிருந்து அருளுகின்றாள். அவளே அசையா சக்தியான சதாசிவமூர்த்தியின் பன்னிரண்டு அம்சங்களோடு சரிபாதியாகச் சேர்ந்தே நிற்கின்ற ஆதிசக்தியாக இருக்கின்றாள்.

வரி வாரியாக

  • வரி 1

    ஆதிப் பரம்பொருளாகிய இறைவி அனைத்திற்கும் ஆரம்பமாகவும் தனக்கென்று ஒரு ஆரம்பம் இல்லாமலும், அனைத்திற்கும் காரணமாகவும் தனக்கென்று ஒரு காரணம் இல்லாமலும் இருக்கின்றாள்.

  • வரி 2

    இவளே வேதங்களை ஓதி முறைப்படி யாகம் வளர்க்கின்ற வேதியர்களுக்காக, அவர்கள் ஓதுகின்ற வேதங்களின் தன்மையாகவும் பொருளாகவும் வீற்றிருக்கின்றாள்.

  • வரி 3

    அவர்கள் ஓதுகின்ற முறைகளையும் அவர்களின் எண்ணிய உருவத்தையும் ஆராய்ந்து, அவர்கள் வேண்டிய உருவத்திலேயே யாகத்தில் வந்து வீற்றிருந்து அருளுகின்றாள்.

  • வரி 4

    அவளே அசையா சக்தியான சதாசிவமூர்த்தியின் பன்னிரண்டு அம்சங்களோடு சரிபாதியாகச் சேர்ந்தே நிற்கின்ற ஆதிசக்தியாக இருக்கின்றாள்.

திருமந்திரம் பாடல் #1124

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout