தொடர்ந்து படிக்கread this section continuously
பன்னிரண் டாங்கலை யாதி வயிரவிதன்னி லகாரமு மாயையுங் கற்பித்துப்பன்னிரண் டாதியோ டந்தம் பதினாலுஞ்சொன்னிலை சோடச மந்தமென் றோதிடே.
உரைmeaning
பன்னிரண்டு கலைகளாக ஆதியிலிருந்தே இருக்கின்ற வயிரவியானவள் தனக்குள் அகாரக் கலையையும் (படைத்தல்) மாயைக் கலையையும் (மறைத்தல்) சேர்த்துப் பதினான்கு கலைகளாகவும், அதனோடு ஆதியும் அந்தமும் சேரும்போது பதினாறு கலைகளாகவும் முடிவுறும். இந்தப் பதினாறு கலைகளையும் சொல்கின்ற நிலையில் அவை பதினாறு எழுத்துக்கள் கொண்ட மந்திரமாக இருக்கின்றது. வயிரவியாக இருக்கும் இந்த மந்திரத்தை ஓதுங்கள் என்று இப்பாடல் கூறுகிறது.
Vairavi, who from the very beginning exists as twelve kalais, joins to herself the kalai of the letter A (creation) and the kalai of maya (concealment), making fourteen kalais; and when the kalais of origin and end join with these, they come to a close as sixteen kalais. When these sixteen kalais are spoken out, they stand as a mantra of sixteen letters. This verse says that this mantra, which is Vairavi herself, is to be recited.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஆதியிலிருந்தே பன்னிரண்டு கலைகளாக இருக்கின்ற வயிரவியானவள்,
Vairavi, who from the very beginning exists as twelve kalais,
- வரி 2Line 2
படைத்தலாகிய அகாரக் கலையையும், மறைத்தலாகிய மாயைக் கலையையும் தனக்குள் சேர்த்துப் பதினான்கு கலைகளாகின்றாள்.
joins to herself the kalai of the letter A, which is creation, and the kalai of maya, which is concealment, making fourteen kalais,
- வரி 3Line 3
அந்தப் பதினான்கோடு ஆதியும் அந்தமும் சேரும்போது,
and when the kalais of origin and end join with the fourteen,
- வரி 4Line 4
அவை பதினாறு கலைகளாக முடிவுறுகின்றன; சொல்லப்படுகின்ற நிலையில் அவை பதினாறு எழுத்துக்கள் கொண்ட மந்திரமாக நிற்கின்றன. வயிரவியாகிய இந்த மந்திரத்தை ஓதுங்கள்.
they come to a close as sixteen kalais, standing as a sixteen-letter mantra; recite this mantra, which is Vairavi herself.
திருமந்திரம் பாடல் #1075





