திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1074

நான்காம் தந்திரம்5. சக்தி பேதம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தானே தலைவி யெனநின்ற தற்பரைதானே யுயிர்வித்துத் தந்த பதினாலும்வானோர் தலமு மனமுநற் புத்தியுந்தானே சிவகதித் தன்மையு மாமே.

உரை

பாடல் #1073 இல் உள்ளபடி நன்மையாகவே இருக்கும் திரிபுரை சக்தியானவள் அனைத்திற்கும் தலைவியாக, ஆதியிலிருந்தே தானாகவே நிற்கின்ற அசையும் சக்தியாகும். அவளே பதினான்கு உலகங்களையும் படைத்து அவற்றிற்கு உயிரூட்டினாள். அவளே தேவர்களின் உலகமாகவும், உயிர்களின் மனமாகவும், நல்ல புத்தியாகவும் இருக்கின்றாள். அடியவர்கள் சென்று அடையும் சிவகதியாகவும் அவளே இருக்கின்றாள்.

வரி வாரியாக

  • வரி 1

    தானாகவே அனைத்திற்கும் தலைவியாக நின்ற தற்பரையாகிய அவள்,

  • வரி 2

    பதினான்கு உலகங்களையும் தானே படைத்து அவற்றிற்கு உயிரூட்டினாள்.

  • வரி 3

    அவளே தேவர்களின் உலகமாகவும், உயிர்களின் மனமாகவும், நல்ல புத்தியாகவும் இருக்கின்றாள்.

  • வரி 4

    அடியவர்கள் சென்று அடையும் சிவகதியாகவும் அவளே இருக்கின்றாள்.

திருமந்திரம் பாடல் #1074

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout