தொடர்ந்து படிக்கread this section continuously
ஓங்காரி யென்பா ளவளொரு பெண்பிள்ளைநீங்காத பச்சை நிறத்தை யுடையவள்ஆங்காரி யாகியே யைவரைப் பெற்றிட்டுரீங்காரத் துள்ளே யினிதுஇருந் தாளே.
உரைmeaning
பாடல் #1072 இல் உள்ளபடி அனைத்திலும் ஓங்கி நிற்கின்ற திரிபுரை சக்தியானவள் ஒரு பெண் பிள்ளையாக இருக்கின்றாள். அவள் என்றுமே நீங்காத பச்சை நிறத்தை உடையவள். அவளே அனைத்திலும் மேலானவளாக நின்று, பிரம்மன், விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து தேவர்களைப் படைத்து, அவர்களின் செயல்களாகவே எப்போதும் இனிமையுடன் இருக்கின்றாள்.
As in verse 1072, Tripurai Sakti, who stands towering in everything, is herself a young female child. She has a green colour that never leaves her. Standing above all things, she creates the five gods, Brahma, Vishnu, Rudra, Maheshwara and Sadashiva, and is always present, with sweetness, as their very acts.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஓங்காரி என்று அழைக்கப்படுகின்ற அவள் ஒரு பெண் பிள்ளையாக இருக்கின்றாள்.
She is called Ongari, and she herself is a young female child.
- வரி 2Line 2
என்றுமே நீங்காத பச்சை நிறத்தை உடையவள்.
She has a green colour that never leaves her.
- வரி 3Line 3
அனைத்திலும் மேலானவளாக நின்று, பிரம்மன், விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து தேவர்களைப் படைக்கின்றாள்.
Standing above all things, she creates the five gods, Brahma, Vishnu, Rudra, Maheshwara and Sadashiva,
- வரி 4Line 4
ரீங்காரத்திற்குள்ளே, அவர்களின் செயல்களாகவே எப்போதும் இனிமையுடன் இருக்கின்றாள்.
and is always present, with sweetness, within the reengaram, as their very acts.
திருமந்திரம் பாடல் #1073





