தொடர்ந்து படிக்கread this section continuously
ஆன வராக முகத்தி பதத்தினள்ஈன வராக மிடிக்கு முசலத்தொடேனை யுழுபடை ஏந்திய வெண்ணகைஊன மறவுணர்ந் தாருள்ளத் தோங்குமே.
உரைmeaning
பாடல் #1071 இல் உள்ளபடி இறைவனின் திருவடிகளைப் போற்றி வணங்குபவர்களின் உள்ளத்தில் திரிபுரை சக்தியானவள் வராஹி என்னும் பெயர் கொண்டு, பன்றியின் முகத்தோடும் அதற்கேற்ற திருவடிகளோடும் வந்து, கீழ்மையான எண்ணத்தை இடித்து மாற்றுகின்ற இரும்பு உலக்கையையும், அந்த எண்ணத்தை சீர்படுத்த உழுகின்ற ஏர் கலப்பையையும், மனதை ஒருநிலைப்படுத்துகின்ற வெண்மையான சங்கையும் கைகளில் ஏந்தியிருக்கின்றாள். அவளின் உருவத்தை மறந்து உருவமற்ற திரிபுரை சக்தியை உணர்ந்தவர்களின் உள்ளத்தில் அவள் ஓங்கி நிற்கின்றாள்.
As in verse 1071, in the hearts of those who praise and worship the Lord's sacred feet, Tripurai Sakti comes under the name Varahi, with the face of a boar and feet fitted to it, and holds in her hands the iron pestle that crushes and changes base thought, the plough that tills and sets that thought in order, and the white conch that steadies the mind into one-pointedness. In the hearts of those who go beyond her form and realize the formless Tripurai Sakti, she stands towering.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அவள் பன்றியின் முகத்தோடும் அதற்கேற்ற திருவடிகளோடும், வராஹி என்னும் பெயர் கொண்டு வருகின்றாள்.
She comes with the face of a boar and feet fitted to it, under the name Varahi.
- வரி 2Line 2
கீழ்மையான எண்ணத்தை இடித்து மாற்றுகின்ற இரும்பு உலக்கையை அவள் ஏந்தியிருக்கின்றாள்.
She holds the iron pestle that crushes and changes base thought,
- வரி 3Line 3
அதனோடு, அந்த எண்ணத்தைச் சீர்படுத்த உழுகின்ற ஏர் கலப்பையையும், மனதை ஒருநிலைப்படுத்துகின்ற வெண்மையான சங்கையும் ஏந்தியிருக்கின்றாள்.
together with the plough that tills and sets that thought in order, and the white conch that steadies the mind into one-pointedness,
- வரி 4Line 4
அவளின் உருவத்தைக் கடந்து உருவமற்ற திரிபுரை சக்தியை உணர்ந்தவர்களின் உள்ளத்தில் அவள் ஓங்கி நிற்கின்றாள்.
and in the hearts of those who go beyond her form and realize the formless Tripurai Sakti, she stands towering.
திருமந்திரம் பாடல் #1072





