தொடர்ந்து படிக்கread this section continuously
அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர்பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்மருளுற்ற சிந்தையை மாற்றி யருமைப்பொருளுற்றுச் சேவடி போற்றுவன் யானே.
உரைmeaning
பாடல் #1070 இல் உள்ளபடி திரிபுரை சக்தி கொடுத்த நல்லருளைப் பெற்று உணர்ந்தவர்கள் அதை எடுத்துச் சொல்லும் போது, அதைக் கேட்கும் மனிதர்களே, நீங்கள் கேட்டதை உணர்ந்து, உலகப் பொருட்களைப் பற்றிக் கொண்டு மாயையில் மயங்கி இருக்கும் உங்களுடைய சிந்தனையை மாற்றி, உலகங்கள் அனைத்தையும் இயக்குகின்ற திரிபுரை சக்தியின் தலைவனாகவும், அடியவர்கள் வணங்கிப் போற்றும் உண்மைப் பொருளாகவும் இருக்கும் இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு, அவனது திருவடிகளையே போற்றி வணங்கும் என்னோடு சேர்ந்து போற்றி வணங்குங்கள்.
As in verse 1070, when those who have received and realized the good grace given by Tripurai Sakti speak of it, you people who hear them, having grasped what you have heard, should change your thinking, which is deluded by maya and clings to worldly things, and take hold of the sacred feet of the Lord, who is master of Tripurai Sakti that drives all the worlds, and who is the true substance that devotees worship and praise. Join with me, who worships and praises only his sacred feet, and worship and praise them together with me.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அருள் பெற்று உணர்ந்தவர்கள் அதை எடுத்துச் சொல்லும்போது, மனிதர்களே, வாருங்கள், கேளுங்கள்.
When those who have received grace speak of it, come, you people, and listen.
- வரி 2Line 2
கேட்டதை உணர்ந்து, உண்மைப் பொருளைத் தன் சிந்தையில் கொண்ட, உலகங்கள் அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனிடம் திரும்புங்கள்.
Having grasped what you have heard, turn to the master of all the worlds, whose mind holds the true substance,
- வரி 3Line 3
மாயையில் மயங்கி இருக்கும் உங்களுடைய சிந்தனையை மாற்றி, அரிய
and change your thinking, which is deluded and clouded, to take hold of the precious
- வரி 4Line 4
உண்மைப் பொருளைப் பற்றிக் கொண்டு, அவனது திருவடிகளையே போற்றி வணங்கும் என்னோடு சேர்ந்து போற்றி வணங்குங்கள்.
true substance; join with me, who worships and praises only his sacred feet, and worship and praise them together with me.
திருமந்திரம் பாடல் #1071





