தொடர்ந்து படிக்கread this section continuously
மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல்வேதாதி நூலின் விளங்கும் பராபரைஆதார மாகியே ஆயந்த பரப்பினள்நாதாதி நாதத்து நல்லரு ளாளே.
உரைmeaning
உடலை இயக்குகின்ற மேதை முதலான பதினாறு கலைகளாக இருந்து அனைத்தையும் இயக்குகின்ற மென்மையான இயல்பைக் கொண்ட, வேதங்கள் கூறும் பராபரை என்பவளே திரிபுரை சக்தியாகும். அவளே அனைத்திற்கும் ஆதாரமாக இருந்து எங்கும் பரந்து வியாபித்திருப்பவள். அவளே நாதத்தின் முதலாகிய இறைவனுடன் சேர்ந்து நல்லருளைத் தருகிறாள்.
She who exists as the sixteen kalais, beginning with Meythai, that drive the body, and who has the gentle nature that sets everything in motion, the Parapara spoken of by the Vedas, is Tripurai Sakti herself. She is the foundation of everything, spread and pervading everywhere. And she it is who joins with the Lord, the origin of Nada, to grant good grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உடலை இயக்குகின்ற மேதை முதலான பதினாறு கலைகளாக இருந்து அனைத்தையும் இயக்குகின்ற மென்மையான இயல்பைக் கொண்டவளும்,
She who exists as the sixteen kalais, beginning with Meythai, that drive the body, and who has the gentle nature that sets everything in motion,
- வரி 2Line 2
வேதங்கள் கூறுகின்ற பராபரை என்பவளுமே திரிபுரை சக்தியாகும்.
the Parapara spoken of by the Vedas, is Tripurai Sakti herself.
- வரி 3Line 3
அவளே அனைத்திற்கும் ஆதாரமாக இருந்து எங்கும் பரந்து வியாபித்திருப்பவள்.
She is the foundation of everything, spread and pervading everywhere.
- வரி 4Line 4
அவளே நாதத்தின் முதலாகிய இறைவனுடன் சேர்ந்து நல்லருளைத் தருகின்றாள்.
And she it is who joins with the Lord, the origin of Nada, to grant good grace.
திருமந்திரம் பாடல் #1070





