திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1069

நான்காம் தந்திரம்5. சக்தி பேதம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆதி விதமிகுத் தண்டந்த மாலங்கைநீதி மலரின்மே னேரிழை நாமத்தைப்பாதியில் வைத்துப் பலகாற் பயில்விரேற்சோதி மிகுத்துமுக் காலமுந் தோன்றுமே.

உரை

ஆதியாக இருக்கும் திரிபுரை சக்தி, பல விதங்களில் நிறைந்திருக்கும் அண்டத்திலுள்ள அனைத்தையும் காத்து அருளுகின்ற திருமாலின் தங்கை என்று அழைக்கப்படுகின்ற பார்வதி தேவியாக, அடியவர்களின் மனசாட்சியாக இருக்கும் நெஞ்சத் தாமரையில் அமர்ந்திருக்கிறாள். அவளின் திருநாம மந்திரத்தை அந்தத் தாமரைக்கு நடுவில் மானசீகமாக வைத்து அந்த மந்திரத்தை செபித்து வரும் அடியவர்களின் உள்ளொளி பெருகி, முக்கால ஞானமும் அவர்களுக்குக் கிடைத்துவிடும்.

வரி வாரியாக

  • வரி 1

    ஆதியாக இருக்கும் திரிபுரை சக்தி, பல விதங்களில் நிறைந்திருக்கும் அண்டத்திலுள்ள அனைத்தையும் காத்து அருளுகின்ற திருமாலின் தங்கை என்று அழைக்கப்படுகின்ற பார்வதி தேவியாக இருக்கின்றாள்.

  • வரி 2

    அடியவர்களின் மனசாட்சியாக இருக்கும் நெஞ்சத் தாமரையில் அவள் அமர்ந்திருக்கின்றாள்.

  • வரி 3

    அவளின் திருநாம மந்திரத்தை அந்தத் தாமரைக்கு நடுவில் மானசீகமாக வைத்து, அந்த மந்திரத்தைச் செபித்து வரும் அடியவர்களுக்கு,

  • வரி 4

    உள்ளொளி பெருகி, இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய முக்கால ஞானமும் கிடைத்துவிடும்.

திருமந்திரம் பாடல் #1069

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout