திருமூலர் அருளிய திருமந்திரம்
கடவுள் வாழ்த்து

பாயிரம் பாடல் 1–50 (50 பாடல்கள்)

ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்துவென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.

போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனைநாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனைமேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.

ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்நக்கனென் றேத்திடு நாதனை நாள்தொறும்பக்கநின் றார்அறி யாத பரமனைப்புக்குநின் றுன்னியான் போற்றிசெய் வேனே.

அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்புகலிடத் தென்றெனைப் போதவிட் டானைப்பகலிடத் தும்இர வும்பணிந் தேத்திஇகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லைஅவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லைபுவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்தவனச் சடைமுடித் தாமரை யானே.

அவனை ஓழிய அமரரும் இல்லைஅவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லைஅவனன்றி மூவரால் ஆவதொன் றில்லைஅவனன்றி ஊர்புகு மாறறி யேனே.

முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்பொன்னையொப் பாகின்ற போதகத் தானே.

தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லைசேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.

பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்பின்னால் பிறங்க இருந்தவன் பேர்நந்திஎன்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்தன்னால் தொழப்படு வாரில்லை தானே.

தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்தானே சுடும்அங்கி ஞாயிறுந் திங்களும்தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்தானே தடவரை தண்கட லாமே.

அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லைமுயலும் முயலின் முடிவும்மற் றாங்கேபெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.

கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்அண்ணல் இவன்என் றறியகி லார்களே.

மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனைவிண்ணளந் தான்தன்னை மேல்அளந் தாரில்லைகண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.

கடந்துநின் றான்கம லம்மல ராதிகடந்துநின் றான்கடல் வண்ணன்எம் மாயன்கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன்கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.

ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்றவேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான்அருட்சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்நீதியு மாய்நித்த மாகிநின் றானே.

கோது குலாவிய கொன்றைக் குழற்சடைமாது குலாவிய வாள்நுதல் பாகனையாது குலாவி அமரருந் தேவரும்கோது குலாவிக் குணம்பயில் வாரே

காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்ஆயம் கத்தூரி அதுமிகும் அவ்வழிதேசம் கலந்தொரு தேவனென் றெண்ணினும்ஈசன் உறவுக் கெதிரில்லை தானே.

அதிபதி செய்து அளகை வேந்தனைநிதிபதி செய்த நிறைதவம் நோக்கியதுபதி யாதரித் தாக்கம தாக்கெனஇதுபதி கொள்என்ற எம்பெரு மானே.

இதுபதி ஏலம் கமழ்பொழில் ஏழும்முதுபதி செய்தவன் மூதறி வாளன்விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கிஅதுபதி யாக அமருகின் றானே.

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்தஅடிகள் உறையும் அறநெறி நாடில்இடியும் முழக்கமும் ஈசர் உருவம்கடிமலர்க் குன்றம் மலையது தானே.

வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்கானக் களிறு கதறப் பிளந்தஎம்கோனைப் புகழுமின் கூடலு மாமே.

மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன்நினைத்த தறிவன் எனில்தான் நினைக்கிலர்எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன்பிழக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே.

வல்லவன் வன்னிக் கிறையிடை வாரணம்நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனைஇல்லென வேண்டா இறையவர் தம்முதல்அல்லும் பகலும் அருளுகின் றானே.

போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்னடிதேற்றுமின் என்றுஞ் சிவனடிக் கேசெல்வம்ஆற்றிய தென்று மயலுற்ற சிந்தையைமாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.

தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்கடந்துநின் றான்கம லம்மலர் மேலேபுணர்ந்திருந் தானடிப் புண்ணிய மாமே.

சந்தி எனத்தக்க தாமரை வான்முகத்துஅந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்றுநந்தியை நாளும் வணங்கப் படும்அவர்புந்தியின் உள்ளே புகுந்துநின் றானே.

இணங்கிநின் றான்எங்கு மாகிநின் றானும்பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்உணங்கிநின் றான்அம ராபதி நாதன்வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே.

காணநில் லாய்அடி யேற்குற வாருளர்நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்கோணநில் லாத குணத்தடி யார்மனத்தாணியன் ஆகி அமர்ந்துநின் றானே.

வானின் றழைக்கும் மழைபோல் இறைவனும்தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார்ஆனின் றழைக்கும் அதுபோல்என் நந்தியைநானின் றழைப்பது ஞானம் கருதியே.

மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்பண்ணகத் தின்னிசை பாடலுற் றானுக்கேகண்ணகத் தேநின்று காதலித் தேனே.

தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்மேவு பிரான்விரி நீர்உல கேழையும்தாவு பிரான்தன்மை தானறி வார்இல்லைபாவு பிரான்அருள் பாடலும் ஆமே.

பதிபல ஆயது பண்டிவ் உலகம்விதிபல செய்தொன்று மெய்ம்மை உணரார்துதிபல தோத்திரம் சொல்லவல் லாரும்மதிஇலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.

சாந்து கமழும் கவரியின் கந்தம்போல்வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறிஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.

ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்மேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடும்ஆற்றுவன் அப்படி ஆட்டவும் ஆமே.

அப்பனை நந்தியை ஆரா அமுதினைஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனைஎப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்அப்பரி சீசன் அருள்பெறலாமே.

நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத்தானும்நின் றான்தழல் தானொக்கு மேனியன்வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்தூனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.

பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் நானே.

வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனைஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும்ஆத்தம்செய் தீசன் அருள்பெற லாமே.

குறைந்தடைந் தீசன் குரைகழல் நாடும்நிறைந்தடை செம்பொனின் நேரொளி ஒக்கும்மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே.

சினம்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்புனம்செய்த நெஞ்சிடைப் போற்றவல் லார்க்குக்கனம்செய்த வாள்நுதல் பாகனும் அங்கேஇனம்செய்த மான்போல் இணங்கிநின் றானே.

போயரன் தன்னைப் புகழ்வார் பெறுவதுநாயக னான்முடி செய்தது வேநல்குமாயகஞ் சூழ்ந்து வரவல்ல ராகிலும்வேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே.

அரனடி சொல்லி அரற்றி அழுதுபரனடி நாடியே பாவிப்ப நாளும்உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்குநிரனடி செய்து நிறைந்துநின் றானே.

போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடிபோற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடிபோற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடிபோற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.

விதிவழி அல்லதிவ் வேலை உலகம்விதிவழி இன்பம் விருத்தமும் இல்லைதுதிவழி நித்தலும் சோதிப் பிரானும்பதிவழி காட்டும் பகலவன் ஆமே.

அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்றுசிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழமுந்திவண் ணாமுதல் வாபர னேஎன்றுபுந்திவண் ணன்எம் மனம்புகுந் தானே.

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்பனையுள் இருந்த பருந்தது போலநினையாத வர்க்கில்லை நின்இன்பம் தானே.

அடியார் பரவும் அமரர் பிரானைமுடியால் வணங்கி முதல்வனை முன்னிப்படியார் அருளும் பரம்பரன் எந்தைவிடியா விளக்கென்று மேவிநின் றேனே.

பரைபசு பாசத்து நாதனை உள்ளிஉரைபசு பாசத் தொருங்கவல் லார்க்குத்திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்கரைபசு பாசம் கடந்தெய்த லாமே.

சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்றுபாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்றுநாடுவன் நானின் றறிவது தானே.

பாடல் #1 · முருகா பாடல்

1 / 50

0:000:00
கடவுள் வாழ்த்துபாடல் 1

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout