திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 7

பாயிரம்கடவுள் வாழ்த்து

தொடர்ந்து படிக்கread this section continuously

முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்பொன்னையொப் பாகின்ற போதகத் தானே.

உரை

ஆதியிலிருந்தே இருக்கும் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் மூத்தவன் சதாசிவமூர்த்தி. தனக்கு ஈடு இணை இல்லாத தலைவன் அவன். அவனை அப்பா என்று அழைத்தால், உயிர்களுக்கு அப்பாவாகவே தோன்றி அருள்புரிவான்; எப்படி அழைத்தாலும் அப்படியே தோன்றுவான். பொன் போன்ற அறிவொளி தரும் பல உபதேசங்களைக் குருவாக நின்று அளிப்பவனும், பொன்னொளி வடிவினனாய் வேதங்களைத் தன்னுள் கொண்டவனும் அவனே.

வரி வாரியாக

  • வரி 1

    ஆதியிலிருந்தே இருக்கும் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் மூத்தவன் சதாசிவமூர்த்தி.

  • வரி 2

    தனக்கு ஈடு இணை இல்லாத தலைவன் அவன்.

  • வரி 3

    அவனை அப்பா என்று அழைத்தால், உயிர்களுக்கு அப்பாவாகவே தோன்றி அருள்புரிவான்; எப்படி அழைத்தாலும் அப்படியே தோன்றுவான்.

  • வரி 4

    பொன் போன்ற அறிவொளி தரும் பல உபதேசங்களைக் குருவாக நின்று அளிப்பவனும், பொன்னொளி வடிவினனாய் வேதங்களைத் தன்னுள் கொண்டவனும் அவனே.

முருகா பாடல்

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout