திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 50

பாயிரம்கடவுள் வாழ்த்து

தொடர்ந்து படிக்கread this section continuously

சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்றுபாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்றுநாடுவன் நானின் றறிவது தானே.

உரை

இறைவனின் திருவடிகளை என் தலைமேல் சூடிக்கொள்வேன். அவனின் திருவடிகளை என் நெஞ்சத்தில் வைத்துக்கொள்வேன், 'எம்பெருமான்' என்று. பலவித மலர்களை அவன் திருவுருவத்தின் மேல் தூவி அவனைப் பணிந்து நின்று, அவன் புகழ்களைப் பாடுவேன். அவன் முன்னால் அவன் பெருமைகளைப் பாடிக்கொண்டே ஆடுவேன். ஆடியபின், அமரர்களின் தலைவன் என்று அவனை நாடி அடைந்து, அனைத்தும் அவனே என்னும் உண்மை ஞானத்தை அறிந்து அவனோடே கலந்து நிற்பேன்.

இறைவனை அடைந்து முக்தி பெற மாபெரும் தவங்களும் யோகங்களும் யாகங்களும் இருந்தாலும், அவனுடைய திருவடியை எண்ணத்தில் எப்போதும் வைத்து, அவனைப் புகழ்ந்து பாடி ஆடி, பலவித மலர்களைத் தூவிப் பூஜித்தாலே அவனை நாடி முக்தியை அடையலாம். இதுவே யாம் அறிந்த சிறந்த உபாயம் என்று திருமூலர் அருளுகின்றார்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனின் திருவடிகளை என் தலைமேல் சூடிக்கொள்வேன்; அவனின் திருவடிகளை என் நெஞ்சத்தில் வைத்துக்கொள்வேன், 'எம்பெருமான்' என்று.

  • வரி 2

    பலவித மலர்களை அவன் திருவுருவத்தின் மேல் தூவி அவனைப் பணிந்து நின்று, அவன் புகழ்களைப் பாடுவேன்.

  • வரி 3

    அவன் முன்னால் அவன் பெருமைகளைப் பாடிக்கொண்டே ஆடுவேன்; ஆடியபின், அமரர்களின் தலைவன் என்று அவனை நாடுவேன்.

  • வரி 4

    அனைத்தும் அவனே என்னும் உண்மை ஞானத்தை இப்போது நான் அறிந்திருக்கிறேன்.

திருமந்திரம் பாடல் #50

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout