திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 51

பாயிரம்வேதச் சிறப்பு

தொடர்ந்து படிக்கread this section continuously

வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்ஓதத் தகும்அறம் எல்லம் உளதர்க்கவாதத்தை விட்டு மதிஞர் வளமுற்றவேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே.

உரை

வேதங்களை விட இறைவன் வழங்கிய அறம் வேறொன்றும் இல்லை. ஓதுவதற்கும் அதன்படி நடப்பதற்கும் ஏற்ற அறங்கள் எல்லாம் வேதத்தில் உள்ளன. நமது முன்னோரான அறிவிற் சிறந்த ஞானிகள் அனைவரும், வேதத்தை ஏன் எதற்கு என்கிற வீண் விவாதங்கள் செய்யாமல், இறைவன் வழங்கிய அந்த வேதத்தை ஓதியே முக்தியைப் பெற்றார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    வேதங்களை விட இறைவன் வழங்கிய அறம் வேறொன்றும் இல்லை.

  • வரி 2

    ஓதுவதற்கும் அதன்படி நடப்பதற்கும் ஏற்ற அறங்கள் எல்லாம் வேதத்தில் உள்ளன.

  • வரி 3

    நமது முன்னோரான அறிவிற் சிறந்த ஞானிகள் அனைவரும், வேதத்தை ஏன் எதற்கு என்கிற வீண் விவாதங்கள் செய்யாமல்,

  • வரி 4

    இறைவன் வழங்கிய அந்த வேதத்தை ஓதியே முக்தியைப் பெற்றார்கள்.

திருமந்திரம் பாடல் #51

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout