திருமூலர் அருளிய திருமந்திரம்
வேதச் சிறப்பு

பாயிரம் பாடல் 51–56 (6 பாடல்கள்)

வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்ஓதத் தகும்அறம் எல்லம் உளதர்க்கவாதத்தை விட்டு மதிஞர் வளமுற்றவேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே.

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்வேதம் உரைத்தானும் வேதம் விளங்கிடவேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.

இருக்குரு வாம்எழில் வேதத்தின் உள்ளேஉருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கிவெருக்குரு வாகிய வேதியர் சொல்லும்கருக்குரு வாய்நின்ற கண்ணனும் ஆமே.

திருநெறி யாவது சித்தசித் தன்றிப்பெருநெறி யாய பிரானை நினைந்துகுருநெறி யாம்சிவ மாநெறி கூடும்ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.

ஆறங்க மாய்வரு மாமறை ஓதியைக்கூறங்க மாகக் குணம்பயில் வார்இல்லைவேறங்க மாக விளைவுசெய் தப்புறம்பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.

பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்ஆட்டும் ஆறாத அவனியில் மாட்டாதார்மேட்டு விருப்பார் விரதம்இல் லாதவர்ஈட்டும் இடம்சென் றிகலலுற் றாரே.

திருமந்திரம் பாடல் #51

1 / 6

0:000:00
வேதச் சிறப்புபாடல் 51

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout